For The First Time In History
புலித்தேவர் தன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம்🪙 🪙 🪙
பாண்டிய குல மன்னர் புலித்தேவர் பற்றி ஒர் ஆய்வு. பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவை சார்ந்த கார்த்திக் மற்றும் அஜய் அவர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
அதில் கிடைத்த சில முக்கிய விஷயங்கள்.சற்று குழப்பமான நிலையிலேயே இருந்து வருகிறது…
இந்த வருடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் கண்டிப்பாக முடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு தொடங்கட்டும்
புலித்தேவர் பற்றிய சில வரலாற்றுச் சுவடுகளை நாம் தேடும் பொழுது நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக சில தகவல்கள் நம் கண் முன்னே இருந்தது.
அதில் புலித்தேவர் தன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம் அதற்கான சில ஆவணங்களும் மதுரை ஆட்சியாளர் அலுவலகத்தில் இருப்பதாகவும் தரவு எண் வரை அதில் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆறு மாத கால முயற்சிக்குப் பின்பு அந்த ஆங்கில தரவுகளை நம்மால் காண முடிந்தது .
மேற்கொண்டு இந்த நாணயத்தை தேடும் பணி நடந்து வருகிறது விரைவில் அதற்கான முடிவுகளையும் நம் பக்கத்தின் மூலம் பகிர்வோம்.
“”””””28.4.1802 தேதியிட்ட வருவாய் வாரியத்தின் செயலாளர் ஜார்ஜ் காரோவுக்கு திருநெல்வேலி கலெக்டர் எஸ்.ஆர். லுஷிங்டன் எழுதிய கடிதத்தில் யூசுப் கான் கால கட்ட மாகாணத்தில் பூலித்தேவர் நாணயங்களை வெளியிட்டுள்ளார்””””
புலித்தேவர் காலத்தில் புலித்தேவரால் நாணயம் வெளியிடப்பட்டதா?
அல்லது அவர் காலத்தில் வேறு ஏது மன்னரும் நாணயம் வெளியிட்டார்களா?
என்பது மர்மமாகவே உள்ளது விரைவில் இதற்கான தரவுகளோடு உங்களை சந்திக்கிறோம்….
300 நாணயங்கள் மட்டுமே இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் புலித்தேவரின் நாணயமாக இருப்பதற்கு 99.9% வாய்ப்பு உள்ளது…
விரைவில் மன்னரின் நாணயத்தோடு
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு

