திருவிதாங்கூர் சமஸ்தானமும்மறவர் படையும்மார்த்தாண்ட வர்மாவின்இராணுவப் புரட்சியும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் அரசர் மார்த்தாண்ட வர்மா. அரசியல் நுண்ணறிவும், போர் திறமையும் கொண்ட திறமையான மன்னராக அவர் விளங்கினார். தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு போர்களில் வெற்றி பெற்று கன்னியாகுமரி முதல் கொச்சி வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர் அவர்.இந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த முக்கியமான சக்திகளில் ஒன்று — மறவர் படை.ஆரம்பகால இராணுவ அமைப்புஆட்சியின்…
-
-
தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் “பாண்டியன்”
தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் ஸ்ரீமாறன்இந்தோ – சீனாவில், பண்டைக் காலத்தில் தோன்றிய மற்றோர் அரசு, சம்பா (Champa).இன்றைக்குத் தென்வியட்நாம் (South Vietnam) என வழங்கும் நாடே, இந்நூற்றாண்டின் முற்பகுதிவரை ‘அன்னாம்’ (Annam) என்றும், பழங்காலத்தில் ‘சம்பா’ என்ற புகழ்மிக்க நாடாகவும் திகழ்ந்தது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில்தான் அந்நாட்டிற்கு ‘அன்னாம்’ என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது. காம்பூச்சியாவிற்குக் கிழக்கேயுள்ள பகுதியே, ‘சம்பா’ எனும் நாடாகும்.சம்பா : பெயர் விளக்கம்’சம்பா’…
-
கடாரம் கொண்டான் சுந்தரபாண்டியன்
சைலேந்திரப் பேரரசின் சந்திரபானு என்ற அரசன், பாண்டியப் பேரரசரின் வீரத்தை உணராமல் போருக்கு செல்வோம் என்ற எண்ணம் வரும் பொழுதே அவனது தோல்வி நிச்சயமானதாகி விட்டது. சுமத்திராவை ஆண்ட சந்திரபானுவை எதிர்த்து, பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264-இல் வெற்றியடைந்ததைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைக்கிறது. அதில், கடாரம் (கடாஹா) எனப்படும் பகுதியைப் பாண்டியன் கைப்பற்றியதைப் பெருமிதமாகக் கூறுகிறது. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 1250 – 1284
-
மதுரை பாண்டியர் கோட்டை எவ்வாறு இருந்தது
பண்டைத் தமிழர்களின் அரண்கள் போர் என்பது அன்று முதல் இன்று வரை நாடு விரிவாக்க அரசியல் நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளங்கள் வென்ற நாட்டால் கொள்ளையடிக்கப்படுதலே போரின் உட்பொருளாகும். அன்றைய “வெட்சி” முதல் இன்றைய “விண்தடை” வரை இதுவே நியதி. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே வெளிப்படையாகவோ. மறைமுகமாகவோ பகைமையைத் தோற்றுவிக்கும் அமைதி கெட்ட நிலையும் அதன் விளைவான மனித வளப்பேரழிவுகளுமே போர் என்பதாகும். இத்தகைய போர்க்காலங்களில்…
-
கோனேரின்மைகொண்டான்
கோனேரின்மைகொண்டான் பாண்டியர், சோழர் மற்றும் கொங்கு அரசர் கல்வெட்டுகளில் காணப்படும் கோனேரின்மைகொண்டான் என்ற சொல்லைக் குறித்து இந்த ஆய்வு கட்டுரை. முன்னோடிக் கல்வெட்டாய்வாளர்களான ஊல்சு வெங்கையா மற்றும் கிருஷ்ண சாஸ்திரி ஆகியோர் இச்சொல் குறித்து ஓரளவு விளக்கியுள்ளனர். முதல் ராஜேந்திரனின் திருவாலங்காட்டுப் பட்டயத்தைப் பதிப்பித்த கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் இச்சொல் பற்றி மிகத்துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு “கோநேரின்மைகொண்டான். கோநோன்மை கொண்டான், கோநேரிம்மைகொண்டான். கோனேரிமேல் கொண்டான், கோநேர்மைகொண்டான், கோநோன்…
-
ஆந்திர மாநிலம் நெல்லூர் தொல்லியல்
ஆந்திர மாநிலம் நெல்லூர் தொல்லியல் அலுவலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் அரசு தொல்லியல் ஆய்வாளர்களுடன் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு
-
கொற்றவை வழிபாடும் மறவரும்
கொற்றவை வழிபாடும் மறவரும் தாய்த் தெய்வங்களும் இலக்கியங்களும் சங்க இலக்கியங்கள் தாய்த் தெய்வத்தை பலவாறு புகழ்ந்து பேசுகின்றன. அணங்கு (அகம். 16,22) ஐயை (வச்சணந்திமாலை 39), கடல்கெழு செல்வி (அகம். 370, நற்றிணை 155), கானமர் செல்வி (அகம். 345), கொற்றவை (திருமுருகாற்றுப்படை 258). பாவை (அகம். 345, 369, 370), பழையோள் (திருமுருகாற்றுப்படை 59) என்று பலபடப் பேசுகின்றன. இவை அனைத்தும் உமையை மையமாகக் கொண்டனவாகவே தெரிகிறது. சிலப்பதிகார…
-
போடி அருகே வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
போடி அருகே வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுப்பு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது போடி : போடி அருகே, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.போடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் டொம்புச்சேரி மற்றும்என்றும், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி கிராமப் பகுதிகள் திருவிடைபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. மேலும் இந்த கிராமப் பகுதியில் முன்பு சிவன் கோயில், பெருமாள் கோயில் இருந்ததாகவும் சிவன் கோயிலுக்கு 100…
-
பூலித்தேவர் சடையவர்ம சுந்தரபாண்டியன்
எங்கள் பாண்டிய மன்னர் பூலித்தேவர் சடையவர்ம சுந்தரபாண்டியன் (கோனேரி மேல் கொண்டான்) சுட்டமலை கல்வெட்டில் அரையன் குவாளைய சந்திரன்’ என்ற பூழிதேவன் என பூலித்தேவன் முன்னோர்கள் சாட்சி கையொப்பம் இட்டுள்ள ஆதாரமான கல்வெட்டு உள்ளது.” என்று குறிப்பிடப்படுகிறது.நன்றி பேராசிரியர் திரு. சந்திரன் (ஆய்வு கண்காணிப்பாளர்) பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு
-
“புலிதேவன்” எனும் பட்டப்பெயர்
மதுரையை அடுத்துள்ள நாகமலையில் உள்ள குகை ஒன்றில் புலி ஒன்று இருந்து கொண்டு ஊர் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது. அப் புலியின் தொல்லை குறித்து ஊர் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர். அது அறிந்த மன்னன் வரகுண சிந்தாமணி பாண்டியன் வீரர் பலரை அழைத்துக் கொண்டு புலிக்குகையை அடைந்தார். வீரர்கள் புலியைக் கொல்லக் குகையினுள் சென்று திரும்பி வரவில்லை. சிந்தாமணி பாண்டியன் ஆவுடையார்புரம் குறுநில ராஜாவை அழைத்துக் குகையினுள்சென்று புலியைக்…