போர் என்பது அன்று முதல் இன்று வரை நாடு விரிவாக்க அரசியல் நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் வளங்கள் வென்ற நாட்டால் கொள்ளையடிக்கப்படுதலே போரின் உட்பொருளாகும். அன்றைய “வெட்சி” முதல் இன்றைய “விண்தடை” வரை இதுவே நியதி. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளிடையே வெளிப்படையாகவோ. மறைமுகமாகவோ பகைமையைத் தோற்றுவிக்கும் அமைதி கெட்ட நிலையும் அதன் விளைவான மனித வளப்பேரழிவுகளுமே போர் என்பதாகும். இத்தகைய போர்க்காலங்களில் தன் நாட்டினையும் தன் மக்களையும் பகைவரிடம் இருந்து காப்பது ஒரு நாட்டு மன்னனின் / தலைவனின் கடமையாகும்.
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பது பண்டைத் தமிழரின் அரசியற் கொள்கையாகும். நாட்டின் மைய இயக்கமாகக் கருதப்பட்ட அரசன் வாழும் இடம் அரண் பல உடையதாக இருந்தது. ‘கோயில்’, ‘அண்ணல் கோயில்’, ‘கடிநகர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட அரண்மனையின் பாதுகாப்பில் கோட்டை முக்கியப் பங்காற்றியது. கோட்டை அரண்மனைக்கு மட்டுமின்றி அது அமைந்திருந்த தலைநகருக்கும் தலையாய பாதுகாப்பாக அமைந்தது. நாட்டைப் பாதுகாக்க ஏற்படுத்தும் கோட்டையும் அதனுள் அமைந்திருந்த முற்றுகைத் தடுப்பு முறைகளும் அரண் என்பதனுள் அடங்கும்.
வலிமையான அரண்கள் ஓர் அரசனின் பகைத்தடுப்பு முறைகளைக் காட்டுவதோடு அவ்வக்காலத்தில் அரசின் எழுச்சியுடன் தோன்றிய போர் நுட்ப அறிவையும். படைக்கல வலிமையையும், நகரின் கட்டட வளர்ச்சியோடு உடன் வளர்ந்த அக்கால மக்களின் தொழில்நுட்ப அறிவையும் காட்டுவன ஆகும். அரண் என்பது பாதுகாப்பு (Defence) மட்டுமல்ல; அன்றைய அரசின் தாக்குதல் வலிமைக்கான (Ofence) கொள்கலனுமாகும்.
தொல்காப்பியத்தில் மதில் பற்றிய சில குறிப்புகள் ( புறம். 10 ) காணப்பெறினும் இதுவரை கிட்டியுள்ள நூல்களில் அரண்பற்றிய செய்திகளை இலக்கணப்படுத்துவது போல அமைந்திருப்பது திருக்குறளே ஆகும்.
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் அரண்களைப் பற்றிய செய்நியைக் குறிப்பிடுகின்றது.
“முழுமுத வரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற் றாகும் என்ப”
(தொல்.புறத்.10)
இவற்றில் முழுமுதல் அரணாவது மலையும், காடும், நீரும் அல்லாத அகநாட்டுச் செய்த அருமதில், வஞ்சனை பயவும் வாய்த்துத் தோட்டி முள் முதலியன பதித்த காவற்காடு. அதனை அடுத்த கிடங்கு / அகழி. யவனர் இயற்றிய பலபொறிகளும் வாயிற்கோபுரமும்,பிற எந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாக இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் கூறுகின்றனர். மேலும் பதிற்றுப்பத்தும் இவ்வகை அரண்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றது.
செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் கோள்வல் முதலைய குண்டுகண் அகழி
வானுற ஓங்கிய வனைத்து செய்யுதிசை ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி நின்னிற் றந்த மன்னெயில்..
(பதிற். 53)
செம்பொறிச் சிலம்பு, எந்திரத் தகைப்பு. குண்டுகண் அகழி முதலான சொற்களோடு ‘வானுற ஓங்கிய வனைந்துசெய் புரிசை என்ற தொடரும் ஆழ்ந்து ஆராயத்தக்கதாகும். புரிசை’ என்ற சொல் கோட்டையை உடைய பெருநகரையே குறிக்கும். (இன்றும் வடநாட்டில் ‘புரி-பூர் என்னும் பின்னொட்டுகளுடன் விளங்கும் அத்தனைப் பெருநகரங்களும் கோட்டை, கொத்தளங்களை உடையனவாகவே உள்ளன. ‘புரி’ என்ற சொல்லின் மருவிய வழக்கே ‘பூர்’ எனக் கொள்ளலாம்).
திருவள்ளுவர் அரணின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றைப் பற்றி விளக்கியுள்ளார். போர்மேற் செல்வோருக்கும், போருக்கு அஞ்சி தற்காத்துக் கொள்ள விரும்புவோர்க்கும் குறள்: 741) அரண் சிறந்ததாகும். “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடு உடைய தரண்”
என்ற குறட்பாவில் (742) மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான பரந்த நிலமும், உயர்ந்த மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே ஒரு நாட்டின் சிறந்த அரண் எனக் குறிப்பிடுகின்றார். மேலும் பகைவர் முற்றுகையிட்டாலும் அவர்களால் கைப்பற்ற முடியாததாகவும். உள்ளிருப்போருக்கு உணவுடையதாகவும்,
எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிநானதாகவும் அமைக்கப்பட்டதே சிறந்த அரண் என்பதை.
கொணற்கரிதாய் கொண்ட கூழ்த் தாகி அகத்தார் நிலைக் கெளிதாம் நீர தரண் என்னும் குறட்பா (745) மூலம் அறிய முடிகிறது.
திருக்குறளில் கூறப்படும் அரண் பற்றிய செய்திகள்
பொதுத்தன்மையன எந்தவொரு குறிப்பிட்ட அரண் பற்றியோ அதன் அமைப்பு மற்றும் உட்கூறுகளைப் பற்றியோ திருக்குறள் விரிவாக விளக்கவில்லை.
இவை குறளின் நோக்கமும் இல்லை. பகைவர் தம் முற்றுகையின் போது அரண் என்பது எவ்வாறு ஒரு நாட்டின் பாதுகாப்பு இயந்திரமாய் (defence mechanism) அமைய வேண்டும் என்பதை விளக்குவதே வள்ளுவரின் நோக்கமாகும். அரசனின் போர்த்திறனின் போர்வினை மாட்சிமையின் ஒரு பகுதியாய் அரண் அமைய வேண்டும் என்பதே ( குறள் 750 ) விளக்கமாகும்.
இறை ஆட்சி மாட்சிமை பெற அரண் இன்றியமையாதது ஆகும். இவ்வகை அரண்கள் முற்றுகையினாலோ. போரினாலோ. சூழ்ச்சியினாலோ, பகைவர்களால் கைப்பற்ற முடியாத சிறப்புடையதாக இருக்க வேண்டும். இவ்வகை அரண்கள், பண்டைத் தமிழகத்தில் சிறந்து காணப்பட்டன. அவற்றை முறையே இயற்கை அரண்கள், இயற்கை செயற்கை அரண்கள், செயற்கை அரண்கள் என மூவகைப் படுத்தலாம்.
இயற்கை அரண்கள் என்பன ஒரு நாட்டினைச் சுற்றியோ அல்லது ஒரு கோட்டையினைச் சுற்றியோ காணப்படும் இயற்கை வளங்களைத் தம் நாட்டின் பாதுகாப்பு அரண்களாக அமைத்துக் கொள்ளும் முறையாகும்.
ஒரு நாட்டின் அரண்களாக மலைகள். காடுகள். ஆறுகள். நிலங்கள் முதலானவை பயன்படுத்தப்பட்டதைத் தமிழ இலக்கியங்கள் மூலம் அறிய முடியும். இவ்வகை அரண்கள் வலிமைபெற அந்நாட்டிற்குப் புவியியல் தன்மையும் மிகவும் பொருத்தமாக அமைவது இன்றியமையாததாகும். இத்தன்மையைப் பொருத்தே அந்நாட்டின் அரண்கள் சிறப்பாக அமையும்.
மலை, காடு,கோட்டைக்கு உள்ளே இருந்த விளை நிலம், கடல், ஆறு முதலானவை முக்கியமான இயற்கை அரண்களாகும். இவற்றுள்ளும் மலையரணும் காட்டரணும் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் பரக்கப் பேசப் பெற்றுள்ளன.
மலைகளையும் சிறந்த இயற்கை அரண்களாகக் கொண்டனர்.
சங்க காலச் சிறூர் மன்னர்கள் நீண்ட மலைத் தொடர்களையும். மலைகளில் கோட்டைகட்டி இவர்கள் ஆட்சி புரிந்தனர். இவற்றில் பாண்டிய நாட்டின் பறம்புமலையும் கொங்கு நாட்டின் கொல்லிமலையும் முற்காலத்தில் சிறந்து விளங்கின. இவ்வகை மலைகள் வளங்கள் நிறைந்து காணப்படுவதால் பகைவர் முற்றுகையின் போது இந்நாட்டிற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
பாரியின் பறம்பு மலையினை மூவேந்தரும் முற்றுகையிட்டபோது பாரி நாட்டிற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில் கழைநெல்லும், பலாக்கனியும், கிழங்கும், தேனும் குறைவற்றுத் தந்த பறம்புமலை பகைவரின் நெடுநாள் முற்றுகையைத் தாங்கி நின்றது. ‘எல்லாப் பொருளும் உடையதாய் (குறள்.746)
இம்மலை பகைவரின் ஊக்கத்தையும் செருக்கையும் அழிப்பதாய் அமைந்திருந்தது. இதனைக் கபிலர்.
தளிகொண் முரசின் மிரு முற்றினும்
“உழுவருழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
அளிதோ தானே பாரியது பறம்பே இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே கொழுங்கொடி வன்னிக் கிழங்குவீழ்க் கும்மே தான்கே அணிநிற வேசரி பாய்தலின் மீதழிந்து தினிநெடுங் குன்றந் தேன் சொரியும்மே வான்க ணற்றவன் கனையே யாங்கு…”
(புறம்.109)
எனச் சிறப்பித்துக் கூறுகிறார். மேலும் இம்மலை முந்நூறு ஊர்களை
உள்ளடக்கிய வளமான குளிர்ந்த நாடு என்பதை.
“முந்தூ றூர்த்தே தண்பறம்பு நன்ளாடு”
என்னும் புறநானூற்று (110) அடி விளக்குகிறது. மிளை அல்லது காவற்காடு
மிளை என்பது நாட்டின் புறத்தே இயற்கையாக அமைந்திருக்கும் அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒருவகை அரண் ஆகும். இவ்வரண்கள் பகைவர்கள் எளிதில் கடந்து வரமுடியாதபடித் தடுப்பு வசதிகளுடனும், அவர்களைத் திடீரெனத் தாக்கும் பொறி அமைப்புகளுடனும் அமைக்கப்பட்டிருக்கும். காக்கும் காட்டிற்கு ‘மிளை” என்பது பெயராகும். இதனை இலக்கியங்கள் ‘கடிமிளை’ (புறம். 21), “அருமிளை (பதிற் 9-ம் பத்து), ‘அருங்குழு மிளை (மதுரை. 64), ‘வருமிளை (சிந். 1142) என்பன போன்ற பெயர்களில் குறிப்பிட்டுள்ளன.
இவ்வகைக் காடுகளில் மிக உயரமான அடர்ந்த மரங்களும் முட்புதர்களும், சூரியக்கதிர்கள் உள்ளே நுழைய முடியாதபடி பகலிலேயே அச்சத்தைத் தரக்கூடிய அடர்ந்த இருளும் சூழ்ந்து காணப்படும்.
(புறம்.21)
“கதிர் நுழை கல்லா மரம்பயில் கடியிளை” “வாழ்முள் வேலிச் சூழ் மிளைப் படைப்பை”
(பெரும்.126)
என்பன சங்க இலக்கியப் பதிவுகளாகும். மேலும், இக்காவற்காட்டினுள்
நுழைய ஆங்காங்கே சிறிய வாயில்கள் காணப்படும்.
இதற்குப் புழை என்று பெயர். போர் தொடங்கும் முன் இவ்வாயில்கள் கலை முள்ளினாலும், எந்திரப் புழையினாலும் அடைக்கப்படும். இதனை,
“செலவசைஇய மறுக்குளம்பினின்
இனநன்மாச் செலக்கண்டவர் கவைமுள்ளிற் புழையடைப்பவும்”
“திங்களும் நுழையா வெந்திரப் படுயுழை”
என்னும் புறப்பாடல் அடிகள் மூலம் அறியலாம்.