மதுரையை அடுத்துள்ள நாகமலையில் உள்ள குகை ஒன்றில் புலி ஒன்று இருந்து கொண்டு ஊர் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது.
அப் புலியின் தொல்லை குறித்து ஊர் மக்கள் மன்னனிடம் தெரிவித்தனர்.
அது அறிந்த மன்னன் வரகுண சிந்தாமணி பாண்டியன் வீரர் பலரை அழைத்துக் கொண்டு புலிக்குகையை அடைந்தார்.
வீரர்கள் புலியைக் கொல்லக் குகையினுள் சென்று திரும்பி வரவில்லை. சிந்தாமணி பாண்டியன் ஆவுடையார்புரம் குறுநில ராஜாவை அழைத்துக் குகையினுள்சென்று புலியைக் கொல்ல ஆணையிடுகிறார்.அதன்படியே ஆயுதங்களுடன் சென்று புலியைக் கொன்று வெற்றியுடன் திரும்புகிறார்.அவரது வீரத்தைப் பாராட்டி அவருக்குப் பல வெகுமதிகள் அளித்து வரகுண சிந்தாமணி புலித்தேவன் என்ற பட்டத்தையும் சூட்டுகிறார்.அதுமுதற் கொண்டு ஆவுடையார்புரம் (நெற்கட்டாஞ்செவல்) குறுநில மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் “புலிதேவன்” எனும் பட்டப்பெயர் சேரலாயிற்று.வரகுணசிந்தாமணி புலிதேவன் தொடங்கி 10-ஆவதாக குருநில பொறுப்பை ஏற்றவர் ‘காத்தப்ப புலிதேவன்” ஆவார்.
இவரது வீரமே நெற்கட்டாஞ்செவல் புகழ் தமிழகம் முழுவதும் பரவ வழிவகை செய்து தந்துள்ளது எனலாம். சாந்தப்ப புலித்தேவர் சித்திரபுத்திர தேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் 1714-ல் மகனாகப் பிறந்தார். இவர் இலட்சுமி நாச்சியார் என்பவரை மணந்து கொண்டார்.
புலித் தேவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு. ஆண் பிள்ளைகள் சிவஞான பாண்டியன், சித்திரபுத்திரதேவர் ஆவர், பெண் மகவு கோமதி முத்துத்தலச்சி ஆவார்.
புலித்தேவர் தன் மண்ணையும் மக்களையும் காக்க பல போர்களை வெற்றிகரமாகச் செய்தார்.
1. கி பி. 1755-ல் கர்னல் ஹெரான் மதுரை. இராமநாதபுரம் கோவில்குடி ஆகிய வெற்றிகரமான படையெடுப்புகளுக்குப் பின் திருச்சி திரும்பி வரும் பொழுது புலித்தேவனிடம் தோல்வியைத் தழுவினார்.
2. கி.பி. 1759-ல் வாசுதேவநல்லூர்க் கோட்டை யினை யூசுப்கான் தாக்கிய பொழுது புலித்தேவன் சமயோசிதமாகப் போரிட்டு யூசுப்கான் படையினை ஓட ஓட விரட்டித் தாக்கினார்.
3. கி.பி. 1760-ல் கான்சாகிபு நெற்கட்டாஞ் செவலைத் தாக்க பீரங்கிகளை அமைத்ததை அறிந்த புலித்தேவன் தனது படைவீரர்களுடன் சென்று கான்சாகிபு முகாமினைத் தாக்கி தோல்வியடையச் செய்தார்.
4. களக்காட்டுக் கோட்டையினை மாபூஸ்கான், தாக்கிய போது புலித்தேவன் திருவாங்கூர்ப் படைகளுடன் அதனை எதிர்த்து மாபூஸ்க்கானைத் தோல்வியடையச் செய்தார்.
தகவல்ஐயா ச.ராஜேந்திரன் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு ஆலோசகர்


