தெற்காசிய கண்டத்தின் முதல் மன்னன் ஸ்ரீமாறன்இந்தோ – சீனாவில், பண்டைக் காலத்தில் தோன்றிய மற்றோர் அரசு, சம்பா (Champa).இன்றைக்குத் தென்வியட்நாம் (South Vietnam) என வழங்கும் நாடே, இந்நூற்றாண்டின் முற்பகுதிவரை ‘அன்னாம்’ (Annam) என்றும், பழங்காலத்தில் ‘சம்பா’ என்ற புகழ்மிக்க நாடாகவும் திகழ்ந்தது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில்தான் அந்நாட்டிற்கு ‘அன்னாம்’ என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது. காம்பூச்சியாவிற்குக் கிழக்கேயுள்ள பகுதியே, ‘சம்பா’ எனும் நாடாகும்.சம்பா : பெயர் விளக்கம்’சம்பா’ என்ற ஒரு நகரம் வட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பகல்பூருக்கு அருகில், அங்க நாட்டின் தலைநகரமாக இருந்தது, அங்கிருந்து அன்னாம் நாட்டில் குடியேறிய மக்கள், தங்கள் நகரத்தின் நினைவாகத், தாங்கள் குடியேறிய நாட்டிற்குச் ‘சம்பா’ என்னும் பெயரை இட்டு, வழங்கி இருக்கலாம் என்பது சில வரலாற்றாசிரியர்களின் கருத்தாகும். ஆனால். அப்பெயர், தமிழ்நாட்டின் சோழர் தலைநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வந்தது எனக் கூறலாம். ஏனெனில், காவிரிப்பூம்பட்டினத்திற்குச் ‘சம்பாபதி’ என்று மற்றொரு பெயர் வழங்கியதைப் பண்டைத் தமிழ் இலக்கியத்தால் அறிகிறோம்.”சம்பு என்பான் சம்பா பதியினுள் செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் வேண்ட கரகம் கவிழ்த்த காவிரிப்பாவை செங்குணக் கொழுகி அச்சம் பாபதியைப் பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற”(மணிமேகலை, பதிகம்: 8-1-4)என்பது மணிமேகலையால் அறியப்படுகிறது. தமிழகத்து மக்கள். தாங்கள் குடியேறிய நாட்டிற்குக் காவிரிப்பூம்பட்டினத்தின் நினைவாக ‘சம்பா’ என்ற பெயரை, அந்நாட்டிற்கு வழங்கியிருக்க்லாம். அந்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பழைய கல்வெட்டுகள் தென்னிந்திய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருப்பது இக்கருத்தினை அரண் செய்கிறது.சம்பாவின் பழங்குடி மக்களான சாமியர் – Chams மலாயா, பாலினீசியா இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.” இவர்கள் பெரும் பாலும் கடல் வழியாக இந்நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம். எக்காலத்தில், சாமியர்கள் சம்பாவினுள் நுழைந்தனர் என்பதை அறுதியிட்டுக் கூற இயலவில்லை. சீனாவின் வரலாற்றுக் கால வழிச் செய்திக் கோவை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே, சாமியர், இந்தோ- சீனாவில் குடியேறித், தங்களுக் ஜென்று தனியரசு ஒன்றை நிறுவியதாகத் தெரிவிக்கிறது.மௌரியப் பேரரசு வீழ்ச்சியுற்றபின் சுங்கர்களும், கண்வர்களும் மகதத்தை ஆண்டு கொண்டிருந்தனர். அக்காலத்தில் தக்கணத்தில் ஆந்திரர்களும், தமிழகத்தில் முடியுடை மூவேந்தர்களும் ஆட்சி புரிந்தனர். கி.மு.முதல் நூற்றாண்டிற்கும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில்தான், இந்தியர்கள் சம்பாவிற்குச் சென்று,குடியேறியிருக்க வேண்டும். சம்பாவில் வோசண் (Vo-chann) என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு ஒன்றால், சம்பாவில் குடியேறிய மக்களின் தாயகம், தென்னிந்தியா என்பது தெரியவருகிறது. அக்கல்வெட்டு “ஸ்ரீமாறன்’ என்ற அரசனுடைய குடும்பத்தைப் பற்றிக்குறிப் பிடுகிறது. பாண்டிய அரசமரபைச் சேர்ந்த ஸ்ரீமாறன், சம்பாவில் -குடியேறி இருக்கலாம். இக்கல்வெட்டின் காலத்தை, அதன்வாசகத்திலிருந்து அறிய முடியவில்லை என்றாலும், அதனுடைய எழுத்து அமைப்பு முறை முதலாம் உருத்திர தாமனின், கிர்நார் (கி.பி. 150) கல்வெட்டையும், வசிஷ்டபுத்திர சதகர்ணியின் காணேரிக் கல்வெட்டையும் பெரிதும் ஒத்திருக்கிறது. இக்கார ணங்களால், இக்கல்வெட்டு கி. பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம் என்று அறிஞர்கள் கருது கின்றனர். இதனால், இந்து அல்லது இந்து சமயத்தை ஏற்றுக் கொண்ட அரசமரபு ஒன்றை ‘ஸ்ரீமாறன்’ என்பவன், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது மூன்றாம். நூற்றாண்டின் தொடக்கத்தில், சம்பாவில் நிறுவினான் என்பது புலனாகின்றது. அந்த அரசு, பிற்காலத்தில், கௌதாரா (Kauthara) எனப்பட்ட மாநிலத்தை ஆட்சிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது. அண்மைக்கால ஆராய்ச்சியாளரான ழூவோ பிலியோழா, “”மாறன்’ என்பது பாண்டியரின் குடிப்பெயர். ஸ்ரீமாறன் எனும் தமிழகத்தைச் சேர்ந்தவன் சம்பாவில் முதன் முதலாக அரசினை நிறுவினான். அவன் தமிழ் நாட்டுப் பாண்டியர் குடியில் தோன்றியவனாக இருத்தல் கூடும்.” என்று கூறியுள்ளார்சம்பாவில், தங்கள் அரசியல் ஆதிக்கத்தைத் தமிழர்கள் நிலை நாட்டுவதற்கு நெடுங் காலத்திற்கு முன்பே, வாணிகத்தின் மூலம் இந்நாட்டோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இக் குடியேற்றம், அறிவுத்துறையில் மட்டும் சம்பாவின் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தது அன்று. இந்தியாவிலிருந்து குடியேறிய மக்கள் சம்பா நாட்டினைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றிய பிறகு, தங்கள் நாகரிகத்தையும் பண்பாட்டையும் சம்பாவில் புகுத்தினர். சீனா, திபெத், கொரியா போன்ற நாடுகளில் குடியேறிய மக்கள், அந்நாடுகளைக் கைப்பற்றவில்லை. அதற்கு மாறாகத், தங்கள் அறிவாற்றலால் அந்நாடுகளை வென்றனர். ஆனால், சம்பாவில், ஜாவா. சுமத்திரா, தாய்லாந்து, காம்பூச்சியா போன்ற நாடுகளில் நிகழ்ந்ததைப் போன்று, இந்தியக் குடியேறிகள் நாட்டையும் அறிவுத் துறையையும் கைப்பற்றினர்.சம்பாவில் கி. பி. முதல் நூற்றாண்டில் குடியேறிய போதிலும், அந்நாட்டின் உண்மையான வரலாறு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடங்குகிறது. சம்பாவினை ஆண்ட முதல் அரசன் ஸ்ரீமாறன் என்பதனை முன்பு, நாம் கண்டோம். இவன் தனது ஆட்சியைக் கி. பி. 190இல் தொடங்கியதாகத் தெரிகிறதுஸ்ரீமாறன், சம்பாவின் வடபகுதியில் இருந்த, அமராவதி மாநிலத்தில்,’இந்திரபுரம்’ என்ற தலை நகரை அமைத்து ஆட்சிபுரிந்தான். இவனுக்குப் பிறகு ஆட்சிக்குவந்த அரசனின் காலத்தைக் குறிப்பிடாத ‘வோ- சண்’ கல்வெட்டு பிழையற்ற சமஸ்கிருதத்தில், இந்திய நாட்டு அரசர்களுடைய கல்வெட்டுகளைப் போன்று, பொறிக்கப்பட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இது, இந்தோ-சீனாவில் கிடைத்துள்ள மிகப் பழைய சமஸ்கிருத மொழிக் கல்வெட்டாகும்.சம்பாவினைப் பன்னிரண்டு அரச மரபுகள் ஆண்டன. அவற்றுள் முதலாவது அரச மரபு, சம்பாவில், இந்திய நாகரிகத் தைப் புகுத்தியதாக நம்பப்படுகிறது. அவ்வரச மரபின் தலைவனாக ஸ்ரீமாறன் விளங்குகிறான். இவனுக்குப் பின்வந்த அரசர்கள், தங்களை ஸ்ரீமாற அரசகுடியில் வந்தவர்கள் என்று கூறிக் கொள்ளுவதில் பெருமிதம் கொண்டனர். எனவே, ஸ்ரீமாறனைப் பற்றிக் கூறும் வோ-சண் கல்வெட்டு, வைதிக சமயத் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆயினும் இக்கல்வெட்டில் காணப்படும் அறவுரைகள், அசோகனுடைய கல்வெட்டுகளில் கூறப்படுவதைப் போன்று உள்ளமையால், இக்கல்வெட்டு புத்தசமயக் கல்வெட்டாகவே இருக்கவேண்டும் என்பர் ஈலியட்.இந்திய நாகரிகமும் பண்பாடும், சம்பாவில் வேரூன்றத் தொடங்கிய காலம் இது. இங்கு முதலில் குடியேறிய தமிழர்கள் வாணிகர்களாகவோ, வீரவாழ்வை விரும்பிய கடல் மறவர்களாகவோ இருந்திருக்க வேண்டும். அவர்கள், தென்னிந்தியாவிலிருந்து வைதிகச் சமயத்தினைக் கொண்டுசென்று புகுத்தியிருக்கலாம்.
இன்னும் சில ஆய்வுகள் தேவை
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு
பாண்டியநாடு அறக்கட்டளை

