விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பெரிய கொல்லப்பட்டி இருக்கக்கூடிய சில வரலாற்றுச் சுவடுகளை நாம் ஜூன் மாதம் 2024 அந்தப் பகுதி முழுவதும் ஆய்வு செய்தோம் அந்த ஆய்வில் நமக்கு கிடைத்தது பல சுவாரசியமான தகவல்கள் முக்கியமாக அந்த ஊரில் அரண்மனை ஒன்று மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது அந்த காலத்தில் அந்த பகுதி எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது ஊரைச் சென்றடைய இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளது கிட்டத்தட்ட நம் கற்பனைக்கு எட்டாத சில தகவல்களும் அங்கு நமக்காக தருகிறார்கள் ஏதோ சின்ன கிராமம் தான் என்று போகும் பொழுதே சில கேலி கிண்டலுடன் சென்று கொண்டிருந்தோம் ஊரை நெருங்கும் தருவாயில் ஒரு சிலர் நின்று கொண்டிருந்தார்கள் சரி அவர்களிடம் சில விஷயங்களை கேட்டுச் செல்லலாம் என்று சற்று வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தோம் கிராமங்களில் பலதரப்பட்ட கதைகள் இருந்தாலும் ஒரு சில கதைகள் அவர்கள் சொல்லும்போதே நமக்குத் தெரிந்து விடும் பெரும் புரளியான கதை என்று. ஆனால் இவர்கள் சொல்லும் ஒவ்வொன்றும் வரலாற்று தகவலுடன் சான்றோடும் இருக்கக்கூடிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
உண்மையிலேயே ஒரு காலத்தில் அந்த ஊர் மிகவும் பிரபலமானது பல செல்வந்தர்கள் அந்த ஊரில் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்காக இன்றளவும் இருக்கக் கூடிய பல சான்றுகள் இன்னும் இடிந்த நிலையில் உள்ளது ஆனால் என்னதான் அந்த கிராமத்துக்கு ஆயிற்று என்பது மட்டும் புரியாத புதிராகவே இன்னும் உள்ளது பலர் சொல்லும் கதைகளை ஏற்கக்கூடிய மனநிலையில் நாங்களும் இல்லை ஆனால் அதைத்தவிர அங்கு வேற எதுவும் நமக்கு தகவல்கள் கிடைக்கவும் இல்லை இருந்தாலும் அந்த பகுதியில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் பல வரலாற்று தகவல்களை நாம் அறியலாம் என்று மட்டும் எங்களுக்கு தோன்றியது மிதமான மழை காரணமாக அங்கிருந்து கிளம்பக் கூடிய சூழ்நிலையும் எங்களுக்கு உண்டாயிற்று. அங்கு நாங்கள் கண்டது அனைத்தையும் புகைப்படமாக இங்கு பதிவிடுகிறேன் நீங்களும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மேற்கூறிய வரலாறுகள் அங்கு ஏதும் நமக்குத் தெரிந்தால் கண்டிப்பாக ஒரு பெரிய பதிவாகவே உங்களுக்கு ஒரு காணொளியாகவே நாங்கள் இங்கு பதிவிடுகிறோம் நன்றி வணக்கம் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு
























