பெண் சிறையில் அடைப்பு
முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியதேவர் காலத்தில் நடைபெற்ற சம்பவம்…
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளூர் ஊரில் அமைந்துள்ள
திருக்காமீசுவரமுடைய நாயனார் கோவில்
(இரண்டாம் சுற்றுச் சுவரின் வடக்குப்புறச்சுவரில் உள்ள கல்வெட்டு)
கோவில் பூசை நாளில் 3 1/8 பங்கு உரிமை உடையவளாகத் தேன .. சானி என்ற ஒருபெண் இருந்தாள். அவள் கோவில் நகைகளை திருடியதால் அவளும் அவளுடைய மருமகளும் சிறைப்படுத்தப் பெற்றனர். சாணி 2 1/2 பங்கு உரிமையும் அவள் மருமகள் 5/8 பங்கு உரிமையும் பெற்றிருந்தனர். அவ்வுரிமையப் பறித்து விலைக்கு விற்றனர். அதன் விலை 250 பணம் என்று நிச்சயிக்கப்பெற்றது. திருஞானசம்பந்தப் பண்டிதர் என்பவர் அப்பணத்தைக் கொடுத்து அப்பூசை உரிமையைப் பெற்றிருந்தார். அவரிடமிருந்து அக்கோவில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவபிராமணர்கள் விமைக்குப் பெற விழந்தனர். அவர்கள் தங்களுக்குரிய உரிமைகளைச் சேர்த்து 250 பணத்துக்கு விற்று அத்தொகையைத் திருஞானசம்பந்தப் பண்டிதர்க்குக் கொடுத்து நாள்பூசை உரிமையைப் பெற்றனர். அவ்வுரிமையை தாங்கள் விற்ற உரிமைக்கேற்ப்ப பகிர்ந்து கொண்டனர். ஒருபணம் என்பது நூறு சோழியக் காசுகளைக் குறிக்கும்.





















