நடுகல்

பாண்டிய குல பேரரசர்

மு.சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் புகழ்!!! வாழ்க!!!

கி.பி. 1251-71 முடிசூடிய முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர் என்பார் பலநாடுகளை வென்றமையால் சுந்தர மகாராசாதி ராசபரமேசுவரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன் எல்லாந் தலையான பெருமாள் எனப் பல பட்டங்களைப் புனைந்து மக்களால் அழைக்கப்பட்டார்.

இவ்வேந்தர் பெருமான் சைவர்களால் கோயில் எனப் போற்றப்பெறும் தில்லைப் பெருங் கோயிலுக்கும், திருவரங்கம் பெரிய கோயிலுக்கும் பலதிருப்பணிகளைப் புரிந்துள்ளார்.

இவர் தில்லையிற் கூத்தப்பெருமானை வணங்கிப் பல துலாபாரதானங்கள் செய்தார். தில்லையம் பலத்தைப் பொன் வேய்ந்தான. தில்லைத் திருக் கோயிலின் மேலைக் கோபுரம் ‘சுந்தர பாண்டியன் திருநிலை எழுகோபுரம் என்னும் பெயரால் (தெ. இ. க. தொகுதி 4-624) கல்வெட்டுக் களிற்குறிக்கப் பெற்றுள்ளது.

எனவே இக்கோபுரத்தைப் பழுது பார்த்துப் புதுக்கியவர் இப்பாண்டிய மன்னன் என்பது நனகு புலனாகும். இவர் தான் துலாபாரம் புக்க பொன்னைக் கொண்டு தில்லைக் கோயிலுக்குப் பொன் வேய்ந்துள்ளார்

இதுபற்றியே இவ்வேந்தன் “கோயில் பொன்வேய்ந்தபெருமாள்” எனப் போற்றப் பெற்றார்.

இச்செய்தி,

“வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவள் வாழ்க சுந்தர மன்னவன் தென்னவனே”

எனத் திருப்புட்குழி திருமால் கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுப் பாடலாற் புலனாகும். இப்பாடலிற் “கோயில்” என்றது தில்லைப் பெருங் கோயிலையும், திருவரங்கம் பெரிய கோயிலையும், இங்ஙனம் தில்லையிலும் திருவரங்கத்திலுமுள்ள திருக்கோயில்களைப் பொன் வேய்ந்தமை பற்றிக் “கோயில் பொன் வேய்ந்த பெருமாள்” என இவரை போற்றப் பெற்றனன எனத் தெரிகிறது,

சினவரிக் கிம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட் சினமத வெங்கரிச் சுந்தரத் தென்னவன் நில்லை மன்றில் வனசத் திருவுடன் செஞ்சொற்றிருவை மணந்ததொக்கும் கனகத்துலையுடன் முத்துத்துலையிற் கலந்ததுவே.

எனவரும் பாடல் இவன் தில்லையில் துலாபாரம் செய்த செய்தியை உணர்த்தும். இவரது பதினோராம் ஆட்சியாண்டில் நந்தவனத்துக்குரிய வரி நீக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் இருத்தோப்பு, சுந்தர பாண்டியன் தெற்குத் திருவிதிஇவற்றின் வளர்ச்சிக்காகவும் குடிகள் வாழ்வுக்காகவும் நிலம் அனித்துள் ளார்.

திருமூலட்டானமுடையார்க்குத திரு வுருத்திரம் அத்தியயனம் பண்ண நிலம் அளித்துள்ளான் . இவனது ஆட்சிக் காலத்தில் 1253 முதல் 1268 வரை சோழநாடு நடுநாடு தொண்டை நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாயிருந்து ஆண்டவன் சடையவர்மன் வீரபாண்டியதேவர் ஆவார்.

இவர் பல்லவ அரசனாகிய இரண்டாங் கோப்பெருஞ் சிங்களிடம் திறை கொண்டு தில்லையில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டார். இச்செய்தி

“திங்கள் அரவமுஞ் செழுமலர்த் தாருடன் பொங்குபுனற் செஞ்சடையோன் பொற்புலியூர் வீற்றிருந்து காடவன் திறையிடக் கண்டினிதிருந்து வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணியருளிய

ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு ‘(புதுக்கோட்டைக் கல்வெட்டுத் தொகுதி ) எனவரும் இவனது மெய்க் கீர்த்தித் தொடரால் இனிது புலனாகும்.

#பாண்டியர்கள்_தேடி_பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *