நடுகல்

பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு.

பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாண்டிய வரலாற்றை ஆவணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம்.

மற்ற தேசங்களில் இல்லாத அளவிற்கு மன்னர்களின் புகழையும் அவர்களின் வீர தீர சாகச செயல்களையும் மற்றும் கொடைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம் அது மட்டும் இன்றி ஒவ்வொரு மன்னர்களுக்கும் பிரத்தியேகமாக தனி வரலாறும் எழுதி வருகிறோம்.

மன்னர்களின் பிறந்தநாள்விழா விமர்சியாக கொண்டாடியும் வருகிறோம். மேற்கொண்டு பல மன்னர்களது பிறந்தநாள் பற்றிய கல்வெட்டு தகவலும் சேகரித்து வைத்துள்ளோம். வரும் காலங்களில் அவர்களுடைய ஆவணங்கள் வெளியிடப்பட்டு அவர்களுடைய பிறந்தநாள் விழாவும் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியதேவர்

மாறவர்மன் சுந்தரபாண்டியதேவர்
மாறவர்மன் விக்கிரம பாண்டியதேவர்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியதேவர் இவர்கள் விழா போல மற்ற மன்னர்களுக்கும் எடுக்கக்கூடிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

பாண்டியர்வரலாறு புத்தகம்

ஆவணமாய் இதுவரை நாம் வெளியிட்ட பல நூறு தகவல்கள் அதையும் தாண்டி வெளியிடப்படாமல் இருக்க கூடிய தகவல்கள் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து காலகட்ட அடிப்படை படி பாண்டியர்களின் முழுமையான வரலாற்றுப் பெட்டகம் தயாராகி வருகிறது.

கல்வெட்டு_வலைதளம்

கல்வெட்டுகளை ஒன்றிணைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்…

கோவில்_மீட்டெடுப்பு

அழியும் தருவாயில் இருக்கும் கோயில்களை மீட்டெடுத்து திருப்பணி செய்து மீண்டும் வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது விரைவில் அதில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உழவாரப்பணி செய்வதற்காக ஆட்கள் இணைய உள்ளார்கள்…

சந்திபூஜைமீண்டும்தொடக்கம்

மன்னர்கள் காலத்தில் கோயில்களில் நடத்தப்பட்ட சந்தி பூஜைகள் பல நூறு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் ஒவ்வொரு கோவில் கல்வெட்டுகளையும் எடுத்து அந்த கல்வெட்டின் படி சந்தி பூஜை தொடர்ந்து செய்ய ஏற்பாடு செய்துள்ளோம் ஏற்கனவே ஆந்திரா முதல் தென் தமிழகத்தில் பல கோவில்களில் ஆரம்பித்துள்ளோம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பாண்டிநாடு #அருங்காட்சியகம்

எங்கள் குழுவின் நோக்கமானது ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய பாண்டிய மன்னர்களுக்கு உருவச்சிலை அமைத்து புகைப்படங்கள் உருவாக்கி பாண்டிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் முதல் ஆயுதங்கள் வரை ஒன்று சேர்த்து பாண்டியநாடு அருங்காட்சியகம் என்று ஒரு மிகப்பெரிய அருங்காட்சியம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.

எங்கள் நோக்கமே முழுமையான பாண்டிய வரலாறு உலகறிய அனைவரும் தெரிந்து கொள்வதற்கும்.
அண்டைய மாநிலம் மற்றும் அண்டை நாட்டு மக்கள் மத்தியில் இந்த உலகில் முதல் குடியாகவும் முதல் மனிதனாகவும் முதல் நாகரீகமாகவும் முதல் பண்பாடாகவும் முதல் பரிணாம வளர்ச்சியாகவும் என அனைத்திற்கும் முன்னோடி எம் பாண்டியர்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும்…

இதுவரை எங்களுடன் உழைத்த மற்றும் இனிமேல் எதிர்காலத்தில் எங்களுடன் உழைக்க காத்திருக்கக் கூடிய உறவுகளுக்கும் இந்த நேரத்தில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் மூன்று முக்கிய மன்னர்களின் வரலாறு நிறைவடைந்தது என்பதையும் இந்த இடத்தில் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இதுவரை நேரடியாக சமூக வலைதளங்கள் வழியாக ஆதரவளித்த அனைத்து உறவுகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *