Temple

பிற்காலப் பாண்டியர் காலத்தில் கொற்கை

பிற்காலப் பாண்டியர் காலத்தில்

#கொற்கை

#பிற்காலப்பாண்டியர் காலத்தில் கொற்கை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.

கொற்கைக்கு இரண்டு கல் தொலைவிலுள்ள ஆத்தூரில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் என்னும் ஸ்ரீ வல்லபனின் ஆறாம் ஆட்சியாண்டுக் (கி.பி.1127) கல்வெட்டு கிடைத்துள்ளது.

அது #அரசன் திருச்சிற்றம் பல தேவநல்லூரில் உள்ள நிலங்களுக்கு வரியை நிர்ணயம் செய்தான் என்று தெரிவிக்கையில், அவ்வூர் கொற்கை நாட்டில் உள்ளது என்று கூறுகிறது. ஊராக இருந்து கொற்கை ஒரு நாட்டின் தலைமையிடத்தை பெற்றுத் திகழ்ந்திருக்கிறது என்று மேற்கூறிய கல்வெட்டால் புரிகிறது.

(பாண்டியர்கள் தேடி பயணம்)

#ஊர் பெயர்

“கொற்கை என்னும் மதுராந்தக நல்லூர்” என்ற பெயர் நாளடைவில் “கொற்கை என்னும் மதுரோதயநல்லூர்” என்று மருவி வழங்கி வந்துள்ளது. இதற்கு அக்கசாலை பிள்ளையார் கோயிலில் கல்வெட்டொன்றைக் கூறலாம். காணப்படும்.

“நம்பேரால் இத்தேவர்க்கு கட்டின #வீரபாண்டியன் சந்தி” என வருவதால் இக் கல்வெட்டு வீரபாண்டியனது என்று நிச்சயமாகக் கூறலாம்.

#அக்கசாலை

இங்கு மற்றொன்றையும் கூற வேண்டியுள்ளது. இப்பொழுது தனித்து விளங்கும் அக்கசாலை என்னும் ஊர் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கொற்கையோடு சேர்ந்த ஒரு பகுதியாக இருந்து வந்ததென்பதை “கொற்கையான மதுரோதய நல்லூர் அக்கசாலை” என வரும் கல்வெட்டினால் உணர முடிகிறது.

#ஈஸ்வரமுடையார் கோயில்

இங்கு காணப்படும் பிள்ளையார் கோயிலை இக்கோயிலிற் காணப் படும் முதற் குலோத்துங்கக் காலக் கல்வெட்டு முதல் பிற்காலப் பாண்டியர் காலக் கால்வெட்டு ஈறாக “ஈஸ்வரமுடையார் கோயில்” என்றே வழங்குகின்றன. எனவே, இது பிள்ளையார் கோயிலாக மாறியது சென்ற ஒரு சில நூற்றாண்டு காலத்திற்குள்ளாகத் தான் என்பது தெரியவருகிறது.

#அகழ்வாய்வு

நாயக்கர்கள் காலத்தில் “#பொற்கை” என வழங்கப் பட்டிருந்தாலும் இன்று தனது பழைய புகழார்ந்த பெயரான கொற்கையையே பூண்டு நிற்கிறது. சிற்றூராகக் காட்சியளிக்கும் இவ்வூரில் இதன் பழம் பெருமையை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் வரலாற்றுப் பழமை பொருள்களேனும், அல்லது வேறு பல சான்றுகளேனும் கிடைக்குமா என்ற எண்ணத்தில் 1969-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அகழாய்வு செய்தது

தமிழ் எழுத்துள்ள பானை ஓடுகள்

நற்பயனின் விளைவாக இப்பொழுது காட்சி அளிக்கும் கொற்கை தான் சங்க காலத்தில் தலைநகராகவும் துறைமுகமாகவும் விளங்கிய கொற்கை நகர் என்று மெய்ப்பிக்கும் வகையில் “தமிழி” எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகளும், வெளிநாட்டார் உபயோகத் தில் கொண்டிருந்த பானை ஓடும், சங்கு வளையல் துண்டு களும் கிடைத்துள்ளன. அத்தோடு இப்பகுதியில் மனித வாழ்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது என்பதற்குச் சான்றாகக் கட்டடப் பகுதி, மண்ணால் செய்யப்பட்ட மணிகள், விலையுயர்ந்த கல்மணிகள் போன்ற வேறு பல பொருள்களும் கிடைத்துள்ளன.

இங்கு கிடைத்துள்ள “தமிழி” எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகளைப் போன்று பாண்டிச்சேரிக்கு அருகாமையிலுள்ள அரிக்கமேட்டிலும், திருச்சியின் ஒரு பகுதியாகிய உறையூரிலும் கிடைத்துள்ளன.

வடக்கத்திய வண்ணம் பூசிய பானை ஓடு ஒன்றும் கிடைத்துள்ளது. இது தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் பண்டைய நாளில் இருந்த நெருங்கியத் தொடர்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்று கருதப் படுகிறது.

கொற்கையின் காலம்

அங்கு. கிடைத்துள்ளவைகளின் காலத்தை கி.பி. முதலிரண்டு நூற்றாண்டினதாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்கள். அவ்வாறெனில் கொற்கையின் காலமும் சங்க காலத்திற்குச் செல்கிறது. அக்காலம் தொட்டு பற்பல மாறுதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட கொற்கை இன்றும் பொலிவு குன்றாது, அடக்கத்துக்கு எடுத்துக் காட்டாக, சிற்றூராகக் காட்சியளிக்கிறது.

டாடா ஆராய்ச்சி நிலையக் கணிப்பு

கொற்கையின் அகழ்வாய்வின் போது கிடைத்த கரித்துண்டுகளைச் சேகரித்து பம்பாயில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அதன் காலத்தைக் கண்டறிந்து கூறும்படி தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் வேண்டப் பட்டது. அவர்களும் நல்ல வண்ணம் ஆராய்ந்து அதன் காலத்தை கி.மு.785 என்று கணித்துள்ளார் கள். எனவே கொற்கையில் (இன்றைக்கு இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்று கூறலாம்.

#பாண்டியர்கள்_தேடி_பயணம்#pandiyanadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *