Temple

கோவில்களின் பொருளாதாரம்:

கோவில்களின் பொருளாதாரம்:கோவில்கள் மக்களின் பொருளாதார வாழ்வில் மிக முக்கிய பங்கை வகித்தன. ஒவ்வொரு பெரிய கோவிலும் பரந்த நிலங்களை உடைய செல்வமிக்க நிறுவனம் ஆக இருந்தது. இக்கோவில்கள் பெரும் நிலங்கள் இருந்ததால், பலர் வேலை வாய்ப்புப் பெற்றனர். கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைச்சல் சாகுபடி செய்தனர். இதன் மூலம் கிராமப்புற வளர்ச்சி, புதிய பாசன நிலங்கள் உருவாக்கல், கைவிடப்பட்ட ஊர்களை மீட்டமைத்தல் ஆகியன ஊக்குவிக்கப்பட்டன.ஒவ்வொரு கோவிலிலும் தங்களது பூஜைக்கு தேவைகளுக்காக பொருட்களை வாங்கினார்கள்.தேங்காய், சந்தனம், அரிசி, கற்பூரம், நெய், சர்க்கரை, இலைகள், பூக்கள் போன்றவை தேவைப்பட்டன. இவை காரணமாகவே கோவில்கள் பெரும் நுகர்வோராகவும், வேலை வாய்ப்பாளர்களை உருவாக்கும் அமைப்பாகவும் இருந்தனகோவில்களின் செல்வம் பெரும்பாலும் மன்னர்களின் தானங்களாலும், பொதுமக்களின் காணிக்கைகளாலும் வந்தவை. இத்தானங்கள் “தேவதாயம்” அல்லது “தேவதானம்” என அழைக்கப்பட்டன. அரசர்கள் நிலங்களை வரிவிலக்காக அல்லது குறைந்த குத்தகைக்கு கோவில்களுக்கு வழங்கினர். சில தானங்கள் கோவில்களின் புனரமைப்பிற்காகவும், தனிநபரின் பெயரில் ஒரு சேவையை நிறுவுவதற்காகவும் வழங்கப்பட்டன.சிறப்பு உதாரணங்கள்:கிருஷ்ணதேவராயர் கொல்மண்டலத்திலுள்ள பல கோவில்களுக்காக 10,000 வராகங்களை தள்ளுபடி செய்தார் என்பது ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில்கள் தங்களது பராமரிப்பு செலவுகளுக்காக வரிகளைச் சேகரிக்க அனுமதிக்கப்பட்டன. சில நேரங்களில் கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு, நீர்த்தேக்கங்களை புனரமைக்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டன.பசியாற்றும் பணி மற்றும் மருத்துவம்:அறப்பணிகளின் ஒரு பகுதியாக கோவில்கள் ஏழைகளுக்குத் தானம் வழங்கும் இடமாக இருந்தன. சந்நியாசிகள், நாடோடிகள் மற்றும் ஏழைகள் திருவிழா காலங்களில் சிறப்பாக உணவளிக்கப்பட்டனர். சில கோவில்கள் மருத்துவமனைகளையும் பராமரித்தன.அரசாங்க ஒழுங்குமுறைகளும் நிர்வாகம்:கோவில்களில் பணியாளர்களின் உரிமைகள், சம்பளம், மரபுப் பணியாளர்களுக்கான உரிமைகள் போன்றவை “சபை” என்ற அமைப்பால் தீர்மானிக்கபட்டன. சிறு தொழில்கள், (எ.கா.) நெய்தல் போன்றவை ஊக்குவிக்கப்பட்டன.பண்பாட்டுத் தொடர்பு மற்றும் கல்வி:கோவில்கள் கல்வி நிறுவனங்களாகவும் செயல்பட்டன. வேதப் பாராயணம், தேவாரம், திருமுறை பாடல்கள், மகாபாரதம், இராமாயணம், புராணங்கள் போன்றவை கோவில்களில் வாசிக்கப்பட்டன. திருமுக்கூடலிலுள்ள வேங்கடேச பெருமாள் கோயிலில் மருத்துவமனை, விடுதி, கல்விக்கழகம் ஆகியவை இருந்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. என்னாயிரத்தில் உள்ள கல்வெட்டுகள் கோவில்கள் கல்வி நிலையங்களாக இருந்ததைக் காட்டுகின்றன.நடனம், இசை, நாடகங்களுக்கு ஊக்கம்:ரங்கமண்டபம் எனப்படும் மேடைகள் கோவில்களில் இருந்தன. இதில் நாடகங்கள், நடனங்கள் இடம்பெற்றன. சில கல்வெட்டுகள் நடிகர்களுக்கான நில வழங்கலைக் குறிப்பதாக உள்ளன. இசைக்கலைஞர்கள், குறிப்பாக வீணை இசைக்காரர்கள் கோவிலில் இசை நிகழ்த்துவதற்காக நிலங்கள் வழங்கப்பட்டன.கட்டடக்கலை மற்றும் சிற்பம்:தெற்கிந்தியக் கோவில்கள் தமிழர் கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகும். பாண்டிய பல்லவ, சோழ, விஜயநகர கால கட்டடங்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்டவை. இவை அரசர்களின் ஆளுமையை மட்டும் காட்டாமல், மக்களின் ஆன்மீக ஆற்றலை பிரதிபலித்தன. கோவில்கள் ஒரு நகர சபை, கல்லூரி, தொழில்நுட்பப் பள்ளியாகவும் இருந்தன.மடங்கள் (மடாலயங்கள்):சைவ, வைணவ மடங்கள் கல்வி நிலையங்களாக இருந்தன. இவை வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் ஆகியவற்றை கற்பித்தன. மடங்கள் பெரும் செல்வமும், அரச ஆதரவும் பெற்றிருந்தன. இவை அந்தக் காலத்தில் பாரம்பரிய நாகரிகத்தை பாதுகாத்த முக்கிய அமைப்புகளாக இருந்தன.முடிவுரை:தெற்கிந்தியக் கோவில்கள் அரசரின் புகழ் காட்டும் நினைவுச்சின்னங்கள் மட்டும் அல்ல; மக்கள் வாழ்வில் அனைத்துப் பரிமாணங்களையும் தொடும், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றை இணைக்கும் மையமாக இருந்தன.அடுத்த தேடலை தொடர்ந்து சு.மணிகண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *