Temple

இரணியூர்

#இரணியூர் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஊராகும். இவ்வூரைச் சார்ந்த ஊருணிக்கரைகளிலும், கண்மாய்க் கரைகளிலும், வயல் வெளிகளிலும் பல #முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அத்தாழிகளில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு சிவப்பு நிறத்தில் செய்யப்பட்ட #மட்கலங்கள் பல கிடைத்துள்ளன. இவை தொன்மைச் சிறப்பு உடையவை. சங்க காலத்திற்குச் சற்று பிற்பட்டவை. கி.பி. 4-5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. எனவே, 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்கள். என்பது அறிய முடிகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு #பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் சீமாற #ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னன் ஆவான். புகழ்பெற்ற #சித்தன்னவாசல் ஓவியங்கள் இம்மன்னன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. இம்மன்னன் பெயரில் அழைக்கப்பட்ட #ஸ்ரீவல்லபுரம் இன்று மருவி #சீவல்பட்டி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் இரணியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்து #கீழச்சீவல்பட்டி என்ற பெயரில் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புடைய ஊர்களை அருகாமையில் கொண்டு விளங்கும் இரணியூர் தொடர்ந்து கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய #மன்னர்களான #சுந்தரபாண்டியன், #குலசேகரபாண்டியன், #வீரபாண்டியன் ஆகியோரது வரலாற்றுத் தொடர்பினைப் பெற்று விளங்குகிறது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் மரபினரது கல்வெட்டுகளும் இவ்வூரில் உள்ளன. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இரணியூர்ப் பகுதி நாயக்க மன்னர்களின் ஆட்சியிலும், கி.பி. 18 நூற்றாண்டில் #சிவகங்கை மன்னரது ஆளுகையிலும் இருந்து வந்துள்ளது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வாசல் நாட்டு இளையாத்தங்குடியான குலசேகரபுரத்து திருவேட்பூருடையார்கள் இரணியூருடனும், இவ்வூர் கோயில்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள் என கல்வெட்டுகள் மூலமாக அறிகிறோம். தொடர்ந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இரணிக் கோயிலோடும் மக்களோடும் தொடர்பு கொண்டு திருப்பணிகள் பல செய்து, ஊருணிகளை வெட்டி, விடுதிகளைக் கட்டி, பாலங்களைச் செப்பனிட்டு, சாலைகளை அமைத்து பல அறச் செயல்களை செய்து வந்துள்ளனர். #பாண்டியர்கள்_தேடி_பயணம்

இரணியூர் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஊராகும். இவ்வூரைச் சார்ந்த ஊருணிக்கரைகளிலும், கண்மாய்க் கரைகளிலும், வயல் வெளிகளிலும் பல #முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

அத்தாழிகளில் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு சிவப்பு நிறத்தில் செய்யப்பட்ட மட்கலங்கள் பல கிடைத்துள்ளன.

இவை தொன்மைச் சிறப்பு உடையவை. சங்க காலத்திற்குச் சற்று பிற்பட்டவை.

கி.பி. 4-5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

எனவே, 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்கள். என்பது அறிய முடிகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு #பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் சீமாற #ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டிய மன்னன் ஆவான். புகழ்பெற்ற #சித்தன்னவாசல் ஓவியங்கள் இம்மன்னன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை. இம்மன்னன் பெயரில் அழைக்கப்பட்ட #ஸ்ரீவல்லபுரம் இன்று மருவி #சீவல்பட்டி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் இரணியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்து #கீழச்சீவல்பட்டி என்ற பெயரில் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புடைய ஊர்களை அருகாமையில் கொண்டு விளங்கும் இரணியூர் தொடர்ந்து கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய #மன்னர்களான#சுந்தரபாண்டியன், #குலசேகரபாண்டியன், #வீரபாண்டியன் ஆகியோரது வரலாற்றுத் தொடர்பினைப் பெற்று விளங்குகிறது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் மரபினரது கல்வெட்டுகளும் இவ்வூரில் உள்ளன. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இரணியூர்ப் பகுதி நாயக்க மன்னர்களின் ஆட்சியிலும், கி.பி. 18 நூற்றாண்டில் #சிவகங்கை மன்னரது ஆளுகையிலும் இருந்து வந்துள்ளது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வாசல் நாட்டு இளையாத்தங்குடியான குலசேகரபுரத்து திருவேட்பூருடையார்கள் இரணியூருடனும், இவ்வூர் கோயில்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள் என கல்வெட்டுகள் மூலமாக அறிகிறோம். தொடர்ந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இரணிக் கோயிலோடும் மக்களோடும் தொடர்பு கொண்டு திருப்பணிகள் பல செய்து, ஊருணிகளை வெட்டி, விடுதிகளைக் கட்டி, பாலங்களைச் செப்பனிட்டு, சாலைகளை அமைத்து பல அறச் செயல்களை செய்து வந்துள்ளனர்.

map link

https://maps.app.goo.gl/rcH3ktrWXrxnbb6m6

#பாண்டியர்கள்_தேடி_பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *