• Temple

    அம்பிகை மாலை

    அம்பிகை மாலை ஏடுகள்-18 இது மதுரை மீனாட்சியம்மன் தோத்திரம். இதனை இயற்றியவர் குலசேகர பாண்டியர் என்பதும் இது முப்பது கலித்துறைகளையுடையது என்பதும் ‘பிடித்தாரைக் கட்டி’ என்னும் ஈற்றுச் செய்யுளால் விளங்கும். இப்பிரதி சிற்சில இடங்களில் சிதிலமாயிருக்கிறது. இது தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலெல்லாம் கற்கும் வழக்குடையது.இந்தப்பிரதியில் 28 செய்யுட்களே இருக்கின்றன.இது அச்சிடப்பட்டிருக்கிறது. பாண்டியர்கள்_தேடி_பயணம்

  • Temple

    கொசக்குடிப் பெருமாள் கோயில்

    கொசக்குடிப் பெருமாள் கோயில் பாகம் 2 திருநெல்வேலி கீழ் வேம்பு நாட்டுத் திருநெல்வேலியில் புதிய இடத்து வீடாக இருக்க மன்னன் முடிவெடுத்துள்ளான். அங்கிருந்து இவ்வாணையை வெளியிட்டுள்ளான். ஆணையில் சுத்த விக்கிரமன் ஒப்பமிட்டுள்ளான். பகழிக் கூத்தர் கோயிலில் வரும் வீர கேரளனுடைய கல்வெட்டிலும் இவ்விக்கிரமன் இடம் பெற்றுள்ளான். கேரள அரசர்களுக்குப் பல்வேறு தலை நகரங்கள் இருந்துள்ளன. திருநெல்வேலியும் கி.பி.1437-38 இல் தலைநகராக இருந்துள்ளது என்பதைக் கல்லெட்டின் மூலம் அறிகிறோம். வைஷ்ணவ துறவி:…

  • Temple

    கொசக்குடிப் பெருமாள் கோயில்

    கொசக்குடிப்_பெருமாள்_கோயில் பாகம்3 பாண்டியமன்னர் கொசக்குடிப் பெருமாள் கோயில் கருவறை தென்புறச் சுவரில் குலசேகரப் பாண்டியன் கல்வெட்டும் கோயில் முன்மண்டபம் கிழக்குச் சுவரில் வீரபாண்டியன் கல்வெட்டும் உள்ளன என்பதை முன்பே கண்டோம். முதல் கல்வெட்டு ஆட்சியாண்டு இல்லை. இரண்டாம் கல்வெட்டில் உள்ளது. இங்குக் குறிக்கப்படும் இரு அரசர் பெயர்களில் பலர் உள்ளனர். கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன், பாண்டிய மன்னர் பலரை இனங் கண்டுள்ளார். அவருடைய பாண்டிய வரலாற்றிலும் இங்குக் குறிக்கப்படும் அரசர்கள்…

  • Temple

    தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம்.

    தென்காசி பாண்டியர் வரலாற்றில் மாற்றம். இன்னும் சில முறையான ஆவணங்களிலும். படி எடுக்கபடாதா கல்வெட்டுகளும் இன்னும் கருவறை பகுதியில் படிக்க படாதா செப்பேடுகளும் முறையான ஆய்வுகள் மேற்கொண்டால் தென்காசி பாண்டியர் மற்றும் கயத்தாறு, வள்ளியூர் வரலாறும் தெளிவாக எடுத்துக் கொண்டு வர முடியும் . வரலாற்றில் நடந்த மாற்றம் அனைவரும் அறிய வரும். #பாண்டியர்கள்_தேடி_பயணம்#pandya#Kingdom#பிற்கால_மன்னர்கள்

  • Temple

    பிற்காலப் பாண்டியர் காலத்தில் கொற்கை

    #பிற்காலப்பாண்டியர் காலத்தில் கொற்கை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. கொற்கைக்கு இரண்டு கல் தொலைவிலுள்ள ஆத்தூரில் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் என்னும் ஸ்ரீ வல்லபனின் ஆறாம் ஆட்சியாண்டுக் (கி.பி.1127) கல்வெட்டு கிடைத்துள்ளது. அது #அரசன் திருச்சிற்றம் பல தேவநல்லூரில் உள்ள நிலங்களுக்கு வரியை நிர்ணயம் செய்தான் என்று தெரிவிக்கையில், அவ்வூர் கொற்கை நாட்டில் உள்ளது என்று கூறுகிறது. ஊராக இருந்து கொற்கை ஒரு நாட்டின் தலைமையிடத்தை பெற்றுத் திகழ்ந்திருக்கிறது என்று மேற்கூறிய…