தமிழ் நாட்டில் கோயிலில்லா ஊர் இல்லை. பண்டை நாளில் கோயில்கள் சிறந்து விளங்கின. சமுதாயம், வாணிகம், ஆட்சி, நிர்வாகம், நீதி முதலிய பல துறைப் பணிகளும், கோயிலிலிருந்தே நடைபெற்றன. ஊர் நிர்வாகங்கள் முழுவதும் கோயில்களிலேயே நடந்தன எனவே பலவகைச் செய்திகளையும் தருகிற கல்வெட்டுகள் கோயில் சுவர்களிலேயே அமைக்கப்பட்டன. அன்றியும் அவ்வக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களையும் அவற்றில் காணலாம். தமிழகத்தில் கல்வெட்டுகள் தமிழிலும் ஸம்ஸ் கிருதத்திலும் பொறிக்கப்பட்டன. தமிழ்மொழியைத் தமிழ் எழுத்திலும்,…