அரிகேசரி தேவர் (எ) பராக்கிரம பாண்டியதேவர் மெய்க்கீர்த்தி பூமிசை வனிதை மார்பினிற் பொலிய நாமிசைக் கலைமக ணலனுற விளங்கப் புயவரை மீது சயமகள் புணரக் கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச்சந்திர குலத்து வந்தவ தரித்து முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கர சரண பங்கயஞ் சூடிச்செங்சோ லோச்சி வெண்குடை நிழற்றி வான வாரியு மன்னருள் வாரியும் தான வாரியுந் தப்பா தளித்து மறக்களை பறித்துநல் லறப்பயிர் விளைத்துச் சிங்கையி லனுரையி லிராசையிற் செண்பையில்விந்தையி லறந்தையின் முதலையில் வீரையில் வைப்பாற் (றெல்லையில்) மன்னரை வெந்கண் டெப்பாற் றிசையு மிசைவிளக் கேற்றிப் பதினெண் பாடைப் பார்த்திவ ரனைவரும் திறையுஞ் சின்னமு முறைமுறை கொணர்ந்துகுறைபல விரந்து குரைகழ லிறைஞ்ச அவரவர் வேண்டிய தவரவர்க் கருளி அந்தண ரனேகர் செந்தழ லோம்ப விந்தைமுத லகர மைந்திடத் தியற்றிச் சிவநெறி யோங்கச் சிவார்ச்சனை புரிந்துமருதூ ரவர்க்கு மண்டப மமைத்து முன்னொரு தூறு மூங்கில்புக் கிருந்த சிற்பரர் தம்மைத் திருவத்த சாமத்துப் பொற்கலத் தமுது பொலிவித் தருளிச் சண்பக வனத்துச் சங்கரர் தமக்குமண்டப மமைத்து மணிமுடி சூட்டிவிழாவணி நடாத்தி விரைப்புன லாடல் வழாவகை நடாத்திநின் மன்னரு ளதனால் வற்றா வருவியும் வற்றி வற்கடம் உற்றவிக் காலத் துறுபுன னல்கெனவேண்டியப் பொழுதே வேறிடத் தின்றிச் சேண்டரு புனலிற் செழும்புன லாட்டி மின்கால் வேணி விசுவநா தர்க்குத் தென்கா சிப்பெருங் கோயில் செய்து நல்லா கமவழி நைமித் திகமுடன்எல்லாப் பூசையு மெக்கோ யிலினும் பொருண்முத லனைத்தும் புரையற நடாத்தித் திருமலி செம்பொற் சிங்கா சனமிசை உலக முழுது முடையா ளுடனே இலகு கருணை யிரண்டுரு வென்னஅம்மையு மப்பனு மாயனைத் துயிர்க்கும் இம்மைப் பயனு மறுமைக் குறுதியும் மேம்பட நல்கி வீற்றிருந் தருளிய ஸ்ரீ அரிகேசரி பராக்க்கிரம தேவர்க்கு யாண்டு
