inscription

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி

மாமன்னர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
மெய்க்கீர்த்தி
கி.பி 1250-1284

“பூமலர் வளந் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர் வளர் கலைவஞ்சி நலிமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறல்மடந்தை திருத்தோளின் மிசைவாழ விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந் தோட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார் நிழற்ற வெங்கோபக் கலிகடந்து செங்கோலெண் டிசை நடப்பச் செம்முரசின் முகில் முழங்கச் சிலையகன்று விசும் படையத் திறற்புலி போய் வனமடையக் கயலிரண்டு நெடுஞ்சிரேக் கனவரையின் விளையாட வொருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத் தருமறையோ ரைவேள்வி யாறங்க முடன் சிறப்ப வருந்தமிழு மாரியமு மறுசமயத் தறநெறியுந் திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் குச்சரரு மாரியரும் கோசலரும் கொங்கணரும் வச்சிரருங் காசியரு மாகதரும் அருமணருஞ் சோனகரு மவந்தியரு முதலாய விருநில மாமுடிவேந்தரி றைஞ்சிநின்று திறைகாட்ட வடிநெடு வாளும் வயப்பெரும் புரவியுந் தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று சேரனுந் தானையுஞ் செருக்களத் தொழிய வாரசும் புலரா மலைநாடு நூறப் பருதிமா மரபிற் பொருதிறல் மிக்க
சென்னனியைத் திறைகொண்டு திண்டோள் வலியிற் பொன்னிநாட்டுப் போசலத் தரைசர்களைப் புரிசையி லடைத்துப் பொங்கு வீரப் புரவியுஞ் செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய தண்டத் தலைவருந் தானையு மழிபடத் துண்டித் தளவில் சோரிலெங்கலுழிப் பெரும்பிணக்குன்ற மிருங்கள லிறைத்துய் பருந்தும் காகமும் பாறுந்(த) சையும் அருந்தி மகிழ்ந்தாங்க கமர்க்கள் மெடுப்பச் செம்பொற் குவையுந் திகழ்கதிர் மணியு”

இங்கே கொடுக்கப்பட்டுள்ளது பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி. இம்மன்னன் கி.பி. 1250 முதல் 1284 வரை அரசாண்டுள்ளார்.

இம்மன்னனுக்கு நான்கு வகையான மெய்க்கீர்த்திகள் எழுதப்பட்டுள்ளன. அவைகளிலே அதிக அளவில் காணப்படுவது ‘எம்மண்டலமும் கொண்டருளிய ‘ என்று ஆரம்பமாகும் மெய்க்கீர்த்தியாகும்.

அவனுடைய மிக நீளமான மெய்க்கீர்த்தி இக்கல்வெட்டில் ஆரம்பமாகியிருப்பது போன்று “பூமலர் வளர் திகழ்” என்று தொடங்கும்.

இவருடைய கல்வெட்டுகளில் சில “சமஸ்தஜகதாதார” என்ற வடமொழி உரைநடையோடு ஆரம்பமாகும்.
இம்மன்னனின் காலத்தில் பாண்டிய நாடு இழந்திருந்த தன் பெருமையை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டது.

இவர் ஆந்திர தேசத்தில் உள்ள நெல்லூர் கடப்பைப் பகுதி வரை தனது ஆட்சிப் பகுதியை விரிவாக்கினான். “அருந்தமிழும் ஆரியமும் அறுசமயத் தறநெறியும் திருந்துகின்ற மனுநெறியும்” திறம்பாமல் இவன் ஆட்சி செய்ததையும் இவனது படைப் பெருமையைக் கண்டு பகைமன்னன் அஞ்சி நடுங்கியதையும் இம்மெய்க்கீர்த்தி விரித்துக் கூறுகிறது.

பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு

பாண்டியநாடு அறக்கட்டளை

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *