நடுகல்

மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா

மும்பையில் பாரக்கிரம பாண்டிய தேவர் திருநாள் விழா! பாண்டியர்கள் தேடி பயணம்வரலாற்று ஆய்வு குழு உறவுகள் சார்பில்📅 02.01.2026மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பை – முலூண்ட் பகுதியில் மன்னர் வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டது.✨ பாண்டியர் வழிபாட்டு பெருவிழா! தென்காசியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து,காசி விஸ்வநாதர் திருக்கோவிலை கட்டியதும்,எண்ணிலடங்கா திருக்கோவில்களுக்கு ஆன்மீகத் திருப்பணிகள் செய்தபாண்டிய தேசத்தின் பேரரசர்தென்காசி பாண்டியர் – சித்தர் பெருமகனார்👑 அரிகேசரி தேவர் (எ)முதலாம் சடையவர்மன்பராக்கிரம பாண்டியதேவர்அவர்களின்🔸 ஜென்ம தினம்(மார்கழி – மிருகசீரிஷம் நட்சத்திரம்)🔸 நினைவு தினம்(மார்கழி – திருவாதிரை நட்சத்திரம்)இவ்விரு திருநாள்களையும் முன்னிட்டுதிருபூஜை வழிபாடு,கொற்றவை தெய்வ வழிபாடு,திருவிளக்கு பூஜைவெகு விமரிசையாகவும், ஆன்மீக சிறப்புடனும் நடைபெற்றது.இந்த பாண்டியர் வழிபாட்டு நிகழ்வில், மும்பை முலூண்ட் பகுதியில் வசிக்கும் உறவுகளும்,பாண்டிய வம்சாவளியினரும்ஒன்றிணைந்து பாண்டிய மன்னர் பெருமானை போற்றி வணங்கினர்.இந்த விழாவை சிறப்பாக முன்னெடுத்த பாண்டியர்கள் தேடிப் பயணம் வரலாற்று ஆய்வுக் குழுவின் விழா ஒருங்கிணைப்பாளர் அருமைச் சகோதரர் பா. சண்முகவேல் பாண்டிய தேவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்🔥 வாழ்க தமிழ்!🔥 வாழ்க பாண்டியர் புகழ்!🔥 வாழ்க தமிழ்நாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *