சடையவர்மன் பராந்தக பாண்டியன் 🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏முதற் குலோத்துங்க சோழனது ஆட்சி காலத்துப் பிற்பகுதி வயச் சார்ந்தவர் இப் பராந்தக பாண்டியன். மாறவர்மன் பராக்கிர பாண்டியனை அடுத்து இவர் சடையவர்மன் என்று பட்டம் பெற்று அரசாண்டிருக்கிறார். ஆனால் பராக்கிரமனுக்கு எவ்வகை உறவு உள்ளவர் என்பது தெரியவில்லை.பாண்டி நாட்டு முடி புனைந்து சேரரைவென்று கூபக நாட்டு மன்னன் மகளை மணந்தார். அளவைப் பொருள்களை முறைப் படுத்திக் கயல் முத்திரை இட்டார், திருவனந்தபுரத்தில் உள்ள திருமால் ஆலயத்திற்கு விளக்கு அமைத்தார். கன்னி பகவதியம்மைக்குத் திருவிழா ஏற்பாடு செய்து புறத்தாய நாட்டை நிவந்தமாக அளித்தான். தெலிங்க விமனை வென்று அவர் நாட்டைக் கைப்பற்றிப் புகழ்மிக ஆண்டார்மெய்க்கீர்த்தி விளக்கம் “திருவளரச் செயம் வளர… கயல் பொறித்து”தலை நகராகிய மதுரையின் மீது பொங்கி எழுந்த கடலை வேலால் எரிந்து சுவறச் செய்து அக் கடலைத் தமது அடி பணியச் செய்தவர் பாண்டிய மன்னர். தமது கயல் சின்னத்தை மலைய மலையில் பொறித்தவர் பாண்டிய மன்னர். இந்திரனைக் கண்டு அவனுக்கு நிகராய் ஆசனத்து வீற்றிருந்தவர் பாடிண்ய மன்னர். இத்தகு சிறப்பு வாய்ந்த பாண்டிய குலத்தில் மதுரை மாநகரில் வந்து தோன்றியவன் இப் பராந்தக பாண்டியன்,பாண்டி நாட்டில் செல்வமும் வெற்றியும் ஓங்கி வளரவும், அரிய நால் வேதங்களும் தழைத்து ஓங்கவும், இவற்றால் உலகம் முழு வதும் துன்பம் என்பதே இல்லாது நீங்கவும், பாண்டியர் குலமாகிய சந்திரகுலத்தின் பெருமை வளரவும் வந்து தோன்றினான் இ பராந்தக பாண்டியன்.”சேரலனைச் செருவில் வென்றுகலமறுத்து”சேர மன்னனைப் போரில் வென்று வாகைசூடித் திறை செலுத்துமாறு செய்தான். தென் திருவாங்கூர் நாட்டைச் சேர்ந்த கூபகம் என்னும் பகுதியினை ஆண்ட மன்னன் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க அவளை மணந்து கொண்டு விழிரும் என்னும் நகரைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொண்டான்.காந்தளூர்ச்சாலை என்னுமிடத்தில் போரில் சேரரது மரக்கலங் களை அழித்துச் சேரரை வென்றான். இப்போரே இவனது முதற் போராகக் குறிக்கப்படுகிறது. இச் செய்திகள் அனைத்தும் இவனது சேர நாட்டுப் போரைக் குறிப்பன. மன்னுபுகழ் மறையவர் தம்… கயலெழுதி”புகழ் பெற்ற ஆயிரத்தெண்மராகிய அந்தணர் நிறைந்த மன்றத்தில் இருந்து சிறந்த அறச் செயல்கள் பலவற்றில் ஈடுபட் டான். முகத்தல் அளவை, நிறுத்தல் அளவை போன்றவற்றில் இருந்த பழைய பெயர்களை மாற்றி ஒழுங்குபடுத்திக் கயல் முத்திரை இட்டு வாணிகம் முறையாக நடக்குமாறு செய்தான். “அனந்தபுரத்து எம்மாற்கு…பூமகட்களித்து”-திருவனந்தபுரத்தில் எழுந்தருளியுள்ள திருமாலுக்கு பொன்னா லாகிய பத்து மணி விளக்குகளை அமைத்துக் கொடுத்து என்றும் எரிவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்தான்.பாண்டியரின் குலதெய்வமாகச் கொண்டாடப்பட்டவர் கன்னி பகவதி யம்மை யாவாள். அவளுக்குத் தைப் பூசத் திருவிழாச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளைச் செய்தான். அவ்விழாவிற்கு வரும் அன்பர்கள் அனைவருக்கும் உணவிடவும், அவர்களுக்கு வேண்டிய பொருனதவி செய்யவும் வேண்டிய பொருளுக்காகப் பெரும் நிவந்தம் ஒன்றினை அமைத்தான். அந்த நிவந்தமாகக் கொடுக்கப்பட்ட பகுதி புறத்தாய நாடு எனப்பட்டது. அறநெறி மிக்கு விளங்கிய அந்நாடு சிறந்த கேள்வி ஞானமுடையோர் விற்றிருந்த நாடாகும்.17-18. “தெலிங்கவிமன் குளங்கொண்டு பராந்தகதேவர்க்கு”தென்கலிங்க நாட்டை ஆண்ட தெலிங்க வீமளோடு போர் செய்து அவனை வென்று தென்கலிங்க நாட்டைத் தனக்கு உரிய தாக ஆக்கிக் கொண்டான். முதற்குலோத்துங்க சோழன் மகன் விக்கிரம சோழனுக்குத் துணையாகச் சென்று பெற்ற வெற்றியே இத் தென்களிங்க வெற்றியாகும் என வரலாற்றுப் பேராசிரியர்கள் கருதுகின்றனர்.இந்தகு வெற்றிகளாலும், மக்களுக்குச் செய்த நன்மைகளாலும், இறை வழிபாட்டுச் செயல்களாலும் சிறந்து விளங்கிய பராந்தகன் எல்லாத் திசைகளையும் தனக்கு உரிய தாக்கிச் செங்கோல் செலுத்தினான்.மெய்க்கீர்த்திஸ்வஸ்தி ஸ்ரீதிருவளரச் செயம்வளரத் தென்னவர்தம் குலம்வனரஅருமறைநான் கவைவளர அனைத்துலகும் துயர் நீங்கத்தென்மதுரா புரித்தோன்றித் தேவேந்திரனோ டினிதிருந்தமன்னர்பிரான் வழுதியர்கோன் வடிம்பலம்ப நின்றருளிமாக்கடலை யெறிந்தருளி மலையத்துக் கயல்பொறித்துர்சேரலனைச் செருவில்வென்று திறைகொண்டு வாகைசூடிக் மகட்கொடுப்பக்கூபகர்கோன் குலவிழிஞம் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக்காந்தளூர்ச்சாலை கலமறுத்து மன்னுபுகழ் மறையவர்தம் அணிஅம்பலத் தினிதிருந்துஆயிரத் தெண்ம ரவிரோதப் பணிப்பணியால்பறைபேர்த்துக் கல்நாட்டிப் பண்டுள்ள பேர்தவிர்த்துஅளப்பனவும் நிறுப்பனவுங் கயலெழுதி அனந்தபுரத் தெம்மாற்குநிலவியபொன் மணிவிளக்கு நின்றெரியப் பத்தமைத்துஆங்கமைத்த தாயநல்லூர் அடத்தென்னாட் டரையனெனஅறிவகையால் பரிந்துரைத்துத் தென்னவர்தம் குலதெய்வம் தென்குமரிக்..திருநாள் விழாவதனில்தைப்பூசப் பிற்றைஞான்று வந்திருந்தா ரெல்லார்க்கும் ஆற்றாதே தியாகமிடஅறத்தால் விளங்கிய வாய்ந்த கேள்வி புறத்தாய நாடு பூமகட் களித்துதெலிங்கவீமன் குளங்கொண்டு தென்கலிங்கம் அடிப்படுத்துத் திசையனைத்தும் உடனாண்ட சிரீபராந்தக தேவர்க்குயாண்டு
