2019ல் கோவில்களில் உழவாரப்பணி பாண்டியநாடு அறக்கட்டளை சார்பாக தொடக்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களில் எண்ணற்ற கோயில்களில் நமது திருப்பணிகள் நடந்து கொண்டே வருகின்றன. நம்மோடு இணைந்து செயல்பட பலரும் விருப்பம் தெரிவித்த வேளையில் பாண்டியநாடு அறக்கட்டளையில் ஒரு அங்கமாக ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டது சைவமும் வைணவமும் இரு கண்களாக போற்றிய பாண்டியர் குல வழித் தோன்றல் பாண்டிய குல பேரரசி முதல் பெண்ணரசி அன்னை மீனாட்சி அவர்களின் பெயரிலேயே தொடங்க முடிவு செய்து அன்னை மீனாட்சி திரு தொண்டர்கள் உழவாரப் பணிக்குழு என்று பெயர் சூட்டி அன்னை மீனாட்சி திருத்தேருக்கு வரவேற்பு அளித்து பணியை துவங்கி உள்ளோம். வரும் காலங்களில் தென்மாவட்டம் முழுவதும் உறவினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது
உயர்ந்தோர்களின் உத்தமத்திருப்பணி உழவாரத்திருப்பணியே குழுவில் இணைவதற்கு 9994109427
