Temple

மூவிருந்தாழி சுந்தரபாண்டியன் தானம் கல்வெட்டு

#திருநெல்வேலி மாவட்டம் #சங்கரன்கோவில் வட்டம் #மூவிருந்தாழி என்ற கிராமத்தில் இருக்கக்கூடிய சிவன் கோயில் முன்பாக நடப்பட்டுள்ள கல்லில்

பிற்கால பாண்டியன் பேரரசர் திருபுவன சக்கரவர்த்தி கோனேரிமை கொண்டான் சுந்தரபாண்டியன் தானம் கல்வெட்டு

திருமாணிக்கீஸ்வரமுடையார் கோவிலுக்குத் திருமடை விளாக இறையிலி தேவதானமாக நிலம் வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்தி ஸ்ரீ இவை வே

2. தி நாயகன் எழுத்து திரிபுவன சக்கரவ

3. த்தி கோநேரின்மை கொண்டான் நெய்

4. ய் தாழியில் உடையார் திருமாணிக்கி ஸ்வரமு

5. டையார் கோயில்…. (ப) ன் மாஹேஸ்வரற்கு

6. இந்நாயனார் திருமடை விளாக மாக

7. முன்னாள் சூலத்தாபனம் பண்ணி

8. க்குடுத் தோம் நான்கெல்லைக் குட்பட்ட நத்த

9. த் தேவதான மிறையிலியாக இருபத்

10. தெட்டாவது அற்பசி முதல் முதல்வ

11. க யிறையிலி யாக தந்தோம் இந்நா

12. ன் கெல்லைக்குட்பட்ட நத்தத்துக்குவ

13. ருங்கடமை அந்தராயம் பொன் வரி

14. காத்திகைப் பச்சை சந்து

15. விக்கிரகப் பேறு (இலா) ஞ்சினைப்பே

16. று வாசல் வினியோகம் மற்று எப்

17. ப்பேர் பட்ட உவாதிகளும் முத

18. லடங்க இறையிலியாகத் தந்

19. தோம் இன்னான் கெல்லைக்

20. குட்பட்ட நத்தம் நம் பேரால் க

21. லியுக ராமன் திருமடை வி

22. ளாக மென்று கல்லு நாட்டிக் கொ

23. ண்டு குடியுமேற்றி கொ

24. ள்ளவும் இப்படிக்கு இவ்வோ

25. லை பிடிபாடாகக் கொ

26. ள்ளவும் இப்படிக்கு இவ்வோ

27. லை பிடிபாடாக் கொ

28. ண்டு சந்திராதி த்தவற்

29, செல்ல கல்லு நாட்டிக்

30. காள்க இவை வேணா

31. டுடையா னெழுத்து

மேற்கில்

1. ற்ச்சுர நாட்டு பேரி

கல்லின் வடபுறம் : 31 வரி கல்வெட்டு உள்ளது

மேற்குப் புறம் சூலபேரர் கோட்டுருவமாக் காட்டப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில் ஒருவரிக் கல்வெட்டுள்ளது.

கிழக்குப்புறம் பாண்டிய அரசுச் சின்னமாகிய இரட்டைக் கயலும் செங்கோலும் கோட்டுருவமாகக் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *