நடுகல்

குலசேகர பாண்டியனின் பெயரில் சேலத்தில் ஏரி

மாமன்னர் குலசேகர பாண்டியன் பெயரில் பெரிய ஏரி இருந்துள்ளது..

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகளுரில் அமைந்துள்ள திருக்காமீசுவரமுடைய நாயனார் கோவில் கருவறையின் முன்மண்டப வடக்குப்புறச்சுவர் கல்வெட்டு கூறும் செய்தி….

மாமன்னர் குலசேகர பாண்டியனின் பெயரில் பெரிய ஏரி இருந்துள்ளது கால மாற்றத்தால் அந்த ஏரியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது ஆனால் அங்கு இருக்கக்கூடிய இரண்டு ஏரிகளில் ஒன்று சித்தேரி மற்றொன்று பெரிய ஏரி என இரண்டு
சித்தேரி பற்றிய எவ்வித தகவல்களும் நமக்கு கல்வெட்டாகவும் சான்றாகவோ இதுவரை கிடைக்கவில்லை ஒருவேளை காலப்போக்கில் அதன் பெயர் மாறியதா இல்லை சற்று தொலைவில் இருக்கக்கூடிய பெரிய ஏரி மன்னர் பெயர் மட்டும் மறைந்து அழைக்கப்படுகிறதா என்பதும் நமக்கு வரும் காலங்களில் தெரியும்

கல்வெட்டு தகவல் 👇👇👇👇👇👇

திருக்காமீசுவரமுடைய நாயனார் கோவிலுக்கு அரசனால் திருநந்தவனப் புற இறையிலியாக இரண்டாயிரம் குழி நன்செய் நிலம் வழங்கப்பெற்றது. இந்நிலம் குலசேகரன் பெரிய ஏரியின்கீழ் இருந்த முதல்தர நன்செய் நிலமாகும்.

கல்வெட்டு🌔🌔🌔🌔🌔

1. ஸ்வஸ்திஸ்ரீ திருமுகப்படி ஸ்ரீ கோச்சடபன்ம

2. 3. ரான திருபுவன சக்கரவத்திகள் எம்மண்டலமும் கொ ண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு ஒன்

4. பதாவது மாசி மாதம் பத்தொன்பதாம் திய

5. தி மிலாடாகிய ஜனனாத வளநாட்டு ஆற்றூர்

6. கூற்றத்து ஆறகளுடையார் திருக்காமீ

7. ஸ்வரமுடைய நாயனார்க்குத் திருநந்தவன

8. 9. ப்புற இறையிலி ஆக இவூர் குலசேகரன் பெ ரி ஏரியில் முதற் தரத்திலே தன்செய் அனைத்

10. தாயம் உட்பட இரண்டாயிரம் குழி

11. இறையிலியாக குடுத்தோம் இப்படிக்கு ஓலைபிடி

12.  பாடாக திருச்சூலத்தாபனம் பண்ணித் சந்திராதித்தவ

13.ரையும் செல்வதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்

14. வது இப்படிக்கு பாண்டிமண்டலத்து முத்தா ற்றுக் கூற்

15.றத்து கப்பலூ ரான உலகளந்த சோழ நல்லூர் ஆதித்த

16.ன் கணபதி ஆழ்வானான காடுவெட்டி எழுத்து

17.திரு எழுத்து இவை துல்லியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *