
மறுபிறப்பு எடுக்கும் மறவர் பட்டி பெருமாள் கோயில்!!!
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி 2021 மறவ பட்டியில் இருக்கும் இக்கோயிலுக்கு நேரடி நமது குழு மூலமாக ஆய்வுக்கு சென்றோம் கோயில் பற்றிய பல தகவல்களை சேகரித்துக் கொண்டு கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்களை பற்றி விசாரித்தோம் . அப்போது கோயில் ஓரளவு சீரமைக்கப்பட்டு வேண்டிய சூழ்நிலை இருந்தது அதன் பிறகு மீண்டும் பத்து நாட்கள் கழித்து ஆகஸ்ட் 23ஆம் தேதி வந்து மறு பார்வையிட்டோம் கோவில் முன்னாள் உள்ள சுவர்கள் அனைத்தும் இடிந்து கிடந்தன பல வகையான முயற்சிகளுக்குப் பிறகுஜூன் மாதம் மீண்டும் இக்கோவிலில் அக்கா ப.தேவி அறிவுச்செல்வம் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலை, வரலாற்று ஆய்வாளர்.
#பிற்கால_பாண்டியர்கள் கோயில் என்று கண்டு அறிந்து அதனை புனரமைப்பதற்கான முன்னெடுப்பை அவ்வூர் மக்களுடன் இணைந்து முயற்சி செய்தோம். அதன்படி இப்பொழுது கோயிலுக்கு புனரமைப்பு வேலை தொடங்கி இருக்கிறது. அடுத்த கட்ட வேலைக்கு தொல்லியல் அறிஞர்களின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வுக்குழு


