வழிபாடு

அன்னை மீனாட்சி திருத்தொண்டர்கள் ஆலயப்பணி குழு

ஆன்மீகத்தை காக்க எங்கள் கோட்பாடுகள்

1) உலக ஆன்மீக திருத்தொண்டர்கள்அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக இணையதளம் அமைத்தும் திருத்தொண்டு வளர்ச்சிக்கு அறக்கட்டளை ஆரம்பித்தும், சைவ வைணவ சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்போம்.

2) ஆன்மீக பாதுகாப்பு மற்றும் திருக்கோயில் குடமுழுக்கு, உற்சவ திருவிழா காலங்களில் திருத்தொண்டர்கள் ஆலயத்தின் உள்ளே சென்று எவ்வித அனுமதி & கட்டண அட்டை(Pass) இன்றி வழிபட சட்டரீதியாக வழிவகை செய்வோம்.

3) வரும்காலங்களில் பொருளாதாரம் மிகவும் குன்றிய நிலையில் உள்ள திருத்தொண்டர்களுக்கு வாழ்வாதாரம் உயர்த்த சிறுதொழில்கள் ஏற்படுத்தி வாழ்வியல் சிறிதேனும் முன்னேற பாடுபடுவோம்.

4) கிராமங்களில் குழந்தைகளுக்கு சைவ வைணவ சமயப்பயிற்சியும், சங்கநாத பயிற்சியும் இளைஞர்களுக்கு சிவகயிலாய வாத்தியம் மங்கலவாத்தியா பயிற்சியும் அளித்து, கிராம மக்கள் மூலம் கூட்டுவழிபாடு நடத்திடுவோம்.

5) உழவாரப்பணி செய்யும் திருத்தொண்டர்கள் மற்றும் திருக்கூட்டத்திற்க்கு, பணிசெய்ய உபகரணங்கள் வழங்கிடுவோம்.

6) தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும்( விளக்கொளி வீசா கோயில்களில்) தினந்தோறும் ஒருவேளையாவது திருவிளக்கு ஏற்ற ஏற்பாடு செய்வோம்.

7)சிதலமைடைந்த, வழிபாடற்ற கோயில்கள் சீரமைத்து, உழவாரம் செய்து, இறைவனுக்கு ஒரு வேளை பூசனையாவது நடைபெறும் படி செய்வோம்.

8)திருக்கோயில்களில் திருமுறை ஆடியோ ஒலி ஏற்பாடுசெய்து திருமுறை ஒலிக்கச்செய்வோம்.

9)திருக்கோயில்களில் நிரந்தர வருமானமின்றி பணிசெய்யும் ஓதுவார்கள், சிவாச்சாரியார்கள், மங்கல இசைக்கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முயற்சி மேற்க்கொள்வோம்.

10) வருடம் தோறும் நடைபெறும், நின்றசீர் நெடுமாறன் பாண்டியன்குருபூஜை விழா அடியார்கள் சார்பில் பெரும்விழா எடுத்து சைவ திருமுறை நன்னெறி மாநாடு நடத்துவோம்

11) ஆலயங்கள் தோறும், சைவ வைணவ சமயக்கல்வியை ஊக்குவிப்போம். சைவ வைணவ சித்தாந்த மற்றும் திருமுறை மன்றங்கள் அமைக்க உறுதுணை புரிவோம்

12) திருதொண்டர்கள்வீடுதோறும் கயல் ஏற்றுவோம்.

13) அறுபது வயதிற்க்கு மேற்ப்பட்ட திருத்தொண்டர்களுக்கு, வருடம் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தலயாத்திரை இலவசமாக அழைத்து செல்வோம்.

14) அடியார்கள் திருக்கயிலாயம் செல்ல அரசின் மானிய உதவியை பெற்றுத்தருவோம்.

15)திருத்தொண்டர் உறுப்பினர்கள் கட்டணமோ, மாத, வருட, ஆயுள் சந்தாவோ, மாநில அடையாள அட்டைக்கட்டணமோ, வசூல் செய்யமாட்டோம்.

16) தமிழகத்தில் வழி வழியாக அறுபத்துமூன்று நாயன்மார்கள் அவதார அல்லது முக்தி தலத்தின் ஊரில் அந்தந்த நாயன்மார்கள் நினைவுபடுத்தும் விதமாக சிறப்புடன் கூடிய பெயர் பலகையும் திருமடமோ அல்லது நினைவு குடிலோ அமைக்க முயற்சி செய்வோம்.

17) தமிழகத்தின் அனைத்து மாவட்ட திருத்தொண்டர்கள் கலந்து கொள்ளும் பெருந்திருவிழாக்கள் நடக்கும் தலத்தின் அருகில் திருத்தொண்டர்கள் தங்குவதற்கு நிரந்தர தங்குமிடம் அமைக்க முயற்சி மேற்கொள்வோம்.

18) குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கோசாலை பசுமடம் அமைத்து, அதில் பசும்பால் நித்தியமாக சுவாமி, அம்பாள் அபிசேகத்திற்க்கும் மேலும் பசுஞ்சாணம் மூலம் தூயதிருநீறு தயாரித்து திருக்கோயில்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம்.

19) சைவ வைணவ சமயத்திற்கென தம்வாழ்வையே, அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் அடியார் பெருமக்களை அடையாளம் கண்டு, அவர்களது தொண்டிற்க்குஉறுதுணையாக இருப்பதோடு, அவர்களையும் சிறந்த முறையில் கவுரவித்து ஊக்கப்படுத்துவோம்.

20) வருங்காலத்தில், எதிர்கால திட்டமாக சைவ வைணவ சமயத்தை போற்றும் விதமாக சைவ வைணவ மாதஇதழ் வெளியீடு மற்றும் சைவ வைணவ நெறியின் மாண்பை உலகம் முழுதும் பறைசாற்றும் விதமாக திருத்தொண்டர்கள் என தொலைக்காட்சி சேனல் தொடங்குவோம்.

21) உலகம் முழுதும் உள்ள திருத்தொண்டர்கள், நம் ஒற்றுமை அடையாளம் மற்றும் வலிமை படுத்தும் விதமாக தமிழகத்தில் உலக திருதொண்டர்கள் மாநாடு நடத்துவோம்.

22) எல்லா மாவட்டங்களிலும் இயற்கை வைத்தியம், சித்த வைத்தியம் முகாம் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உடன் இணைந்து முகாம் நடத்தி திருத்தொண்டர்கள் நலம் காப்போம்.

23).மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் குறிப்பிட்ட வயதினருக்கு கல்வி, பொதுப் பாதுகாப்பு, பயிற்சி மற்றும் வேலை சார்ந்த தொழில்சார் பயிற்சி ஆகியவற்றை வழங்குதல்.

24) பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பைத் தொடர மாணவர்களுக்கு உதவும் நோக்கில், உதவித்தொகை, பரிசுகள், வெகுமதிகள், உதவித்தொகை மற்றும் பிற நிதி உதவி அல்லது பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்குதல், செலுத்துதல் அல்லது வழங்குதல். கலைப் பள்ளிகள், இந்தியாவில் கலாச்சாரக் கலைகள் அல்லது பிற பயிற்சி, ஆராய்ச்சி அல்லது பிற கல்விப் பணிகளைக் கற்பித்தல் உள்ளிட்ட வணிக மற்றும் பிற கலைகளை கற்பிக்கும் நிறுவனம்.

25) நோய்வாய்ப்பட்ட, ஊனமுற்றோர் மற்றும் நோயுற்றவர்களுக்கு சிகிச்சை மற்றும் பிற ஆதரவில் உதவுவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. வழிகாட்டுதல், கல்வி கற்பித்தல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை உருவாக்குதல் மற்றும் பிற்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கான சுகாதார மையத்தை உருவாக்குதல், மேம்படுத்துதல், கட்டமைத்தல், மேம்படுத்துதல் ஆகியவை சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றன.

26.) திறமையான குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அனைத்து வகையான மருத்துவ உதவி, சுகாதார பரிசோதனை முகாம்கள் மற்றும் கல்வி உதவித்தொகை மூலம் அவர்களின் கல்வி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை சமூக விழிப்புணர்வு குடிமக்களாக மாற்றுவதற்கு உதவுதல். சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல்.

27) இங்கு மருத்துவ நிவாரணத்தை ஒரு தொண்டு நோக்கமாகக் கூறுவதன் நோக்கம், உளவியல், ஹோமியோபதி, பிசியோதெரபி, இயற்கை மருத்துவம் அல்லது மூலிகை மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம் மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளைச் சேர்ப்பதாகும்.

28). காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் பற்றி மக்களுக்கும் சமூகத்திற்கும் பெரிய அளவில் அறக்கட்டளை கல்வி கற்பிக்கும், மேலும் காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்துகிறது

29) சைவ வைணவ நெறியை இரு கண்களாக போற்றி எண்ணற்ற ஆன்மீக திருப்பணிகளை செய்து ஆன்மீகத்தை நிலை நாட்டியபாண்டிய மன்னர்களை உலகறியச் செய்வோம்.

30) பராந்தக நாராயணன்,நின்ற சீர் நெடுமாற பாண்டியன், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், விக்கிரமபாண்டியன், பார்க்கிர பாண்டியன் , அதிவீரராம பாண்டியர் அனைவரது திருத்தொண்டுகளை பரப்புரை செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *